- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் விஜய் அடிக்கடி விரும்பி சாப்பிடும் உணவு இதுதான்… தளபதியின் சொந்த தாய் மாமா மகள்...

நடிகர் விஜய் அடிக்கடி விரும்பி சாப்பிடும் உணவு இதுதான்… தளபதியின் சொந்த தாய் மாமா மகள் சொன்ன சீக்ரெட்!

- Advertisement -

நடிகர் விஜய் ஜனநாயகன் படத்தில் நடித்து முடித்த நிலையில் இப்போது தமிழக வெற்றிக் கழகம் அரசியல் இயக்கத்தின் தலைவராக, கட்சி பணிகளில் தீவிரமாக இருந்து வருகிறார். மிக விரைவில் அவர் தமிழ்நாடு முழுவதும் தொகுதி வாரியாக மக்களை நேரில் சந்திக்க திட்டமிட்டுள்ளார். அதற்கான பயண திட்டங்களை ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

நடிகர் விஜயின் அம்மா ஷோபா சந்திரசேகர். அவரது சொந்த சகோதரர் எஸ்என் சுரேந்தர். இவர் பிரபல பாடகர். மாமரத்து பூ எடுத்து மஞ்சம் ஒன்று போடவா… பூங்கதவே தாழ் திறவாய்… பாரி ஜாத பூவே போன்ற பல சூப்பர் ஹிட் பாடல்களை பாடியவர். சென்னை 28 உள்ளிட்ட சில படங்களில் நடித்தும் இருக்கிறார்.

எஸ் என் சுரேந்தரின் மகள்தான் பல்லவி சுரேந்தர். இவர் நடிகர் விஜய்க்கு சொந்த தாய் மாமா மகள். ஆனால் விஜய் தனது மாமா மகள் பல்லவியை திருமணம் செய்யாமல், இலங்கையை சேர்ந்த தொழிலதிபர் மகள் சங்கீதாவை திருமணம் செய்துக்கொண்டார். அவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர்.

இந்நிலையில் விஜயின் அம்மா ஷோபா சந்திரசேகர், தனது சகோதர் மகள் பல்லவி சுரேந்தருடன் இணைந்து அடிக்கடி ரீல்ஸ் எடுத்து போடுவது வழக்கம். அதே போல் தனது அத்தையுடன் எடுத்த வீடியோக்களை ரீல்ஸ்களை பல்லவி சுரேந்தரும் தனது வலை தள பக்கங்களில் பகிர்ந்து வருகிறார். இவை அதிகளவில் பார்வையாளர்கள் மத்தியில் வைரலாகின்றன.

இந்நிலையில் தனது சொந்த அத்தை மகன் நடிகர் விஜய் குறித்து பல்லவி சுரேந்தர் ஒரு நேர்காணலில் கூறுகையில், அவருக்கு விருப்பமான உணவு என்றால் அது தோசையும் சிக்கன் குழம்புதான். ஒவ்வொரு முறை விஜய் எங்கள் வீட்டுக்கு வரும்போதும் அதை தான் நான் செய்து தருகிறேன். மிகவும் விரும்பி அதை சாப்பிடுவார், என்று பல்லவி சுரேந்தர் கூறியிருக்கிறார்.

நடிகர் விஜய் ஒரு தோசை பிரியர். அவரே தோசை சுடுவதில் நிபுணர்தான். ஜில்லா படப்பிடிப்பின் போது மலையாள நடிகர் மோகன்லாலுக்கு நடிகர் விஜயே தோசை சுட்டு பரிமாறி இருக்கிறார். அத்துடன் நடிகர் விஜய்க்கு மிகவும் பிடித்த உணவுகளில் மற்றொன்று தயிர் சாதமும் ஊறுகாயும்தான். ஷூட்டிங் ஸ்பாட்டில் பரிமாறப்படும் அசைவ விருந்தை மற்றவர்கள் எல்லாம் ஒரு பிடி பிடிக்க, விஜய் தன் அறையில் அமர்ந்து தயிர் சாதமும் ஊறுகாயும்தான் சாப்பிடுவதுதான் வழக்கம்.

சற்று முன்