- Advertisement -
இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜீத்குமார் நடிக்கும் டேர்டெவில் படத்தில் முதலில் கதாநாயகியாக ஸ்ரீலீலா பெயர் அடிபட்டது. பிறகு கயாடு லோஹர் என்று கூறிய நிலையில் ஸ்ரீலீலா நடிக்கவில்லை என்றனர். ஆனால் உண்மையில் அஜீத்குமாருடன் நடிக்க ஸ்ரீலீலா ஆர்வமாக உள்ளார். ஆனால் தெலுங்கு சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக உள்ள ஸ்ரீலீலாவுக்கு மிகவும் குறைந்த சம்பளம் பேசப்பட்டுள்ளதுதான் அவர் நடிக்க மறுக்க காரணம். எனினும் சம்பள பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிக்கிறது. ஒருவேளை ஸ்ரீலீலா நடிக்க மறுத்தால் பிளாஸ்ட் பட நாயகி ப்ரீத்தி முகுந்தன் நடிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.





