- Advertisement -
தமிழ்நாட்டில் உள்ள கோவிலுக்குள் மொபைல் போன் சுவிட்ச் ஆஃப் செய்து கொண்டு செல்ல வேண்டும் என்ற உத்தரவு உள்ளது. பெரும்பாலான பெரிய கோவில்களில் செல்ஃபோன்களை பாதுகாப்பு மையங்களில் வைத்து செல்லவும் வசதி உள்ளது. இந்த உத்தரவை பக்தர்கள் மீறுவது தொடர்கிறது. திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு வந்த நடிகர் ராகவா லாரன்ஸ் சுவாமி தரிசனம் செய்தார். அவரை சூழ்ந்து கொண்டு மொபைல் போனில் செல்ஃபி எடுத்துக் கொண்ட ரசிகர்களால் கோவிலுக்குள் செல்போன் கொண்டு போக கூடாது என்ற அரசின் தடை மீறப்பட்டுள்ளது சர்ச்சையாகி உள்ளது.





