- Advertisement -
Homeபொழுதுபோக்குகூலி திரைப்படத்தின் முதல் பாதியை பார்த்த ரஜினிகாந்த்... லோகேஷ் கனகராஜிடம் சூப்பர் ஸ்டார் சொன்ன ஒரே...

கூலி திரைப்படத்தின் முதல் பாதியை பார்த்த ரஜினிகாந்த்… லோகேஷ் கனகராஜிடம் சூப்பர் ஸ்டார் சொன்ன ஒரே ஒரு வார்த்தை இதுதான்….

- Advertisement -

ரஜினிகாந்த் நடித்த கூலி திரைப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதி வெளியாகிறது. படம் ரிலீஸ் ஆக இன்னும் இரண்டு மாதங்களே இருப்பதால், அதற்கான போஸ்ட் ப்ரோடுக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளது. அனிருத் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இதில் தேவா என்னும் கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடித்திருக்கிறார். படம் தங்கக் கடத்தலை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருப்பதாகவும், இதற்காக துறைமுகம் சார்ந்த காட்சிகள் நிறைய தேவைப்பட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இதற்காகவே ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் துறைமுகம் பகுதியில், பிரம்மாண்ட செட் போட்டு இந்த படத்தை எடுத்திருக்கிறார்கள்.

கூலி திரைப்படத்தில் அடுத்ததாக நாம் கவனிக்க வேண்டிய விஷயம், அதில் இடம்பெற்றிருக்கும் கதாபாத்திரங்கள் தான். முக்கியமாக சைமன் என்னும் கதாபாத்திரத்தில் வருகிறார் நாகார்ஜுனா. அவருக்கு படத்தில் வில்லன் கதாபாத்திரத்தை கொடுத்திருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.

இதுபோக மலையாளத்திலிருந்து சோபின் ஷாகிர், கன்னட திரை உலகில் இருந்து உபேந்திரா உள்ளிட்டோரும் கூலி திரைப்படத்தில் இடம்பெற்று இருக்கிறார்கள். சத்யராஜும், கமல்ஹாசன் மகள் ஸ்ருதிஹாசனும் நடித்திருக்கிறார்கள். மிக முக்கியமாக பாலிவுட் நட்சத்திரம் அமீர்கான் கூலி திரைப்படத்தில் கேமியோ ரோலில் வருகிறார்.

இதை சமீபத்தில் அளித்த பேட்டியில் அமீர் கானே உறுதி செய்தார். படத்தில் தான் கிளைமாக்ஸ் காட்சியில் வருவேன் என்றும், அது மிகக் குறைவான சீன்தான் என்றாலும், அதன் தாக்கம் அதிகமாக இருக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார். இப்படி ஒவ்வொரு அப்டேட்டும் ஆச்சரியப்படுத்தி இருப்பதால் கூலி படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரிக்கச் செய்துள்ளது.

இந்த திரைப்படத்தில் இருந்து ஏற்கனவே சிக்குடு பாடலின் கிளிப்ஸ் வீடியோ வெளியானது. அனிருத்துடன் இணைந்து டி ராஜேந்தர் இந்த பாடலை பாடியிருந்தார். அனேகமாக இந்த மாதத்தின் இறுதியில், அந்தப் பாடலின் வீடியோ வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. பூஜா ஹெக்டேவும் ஒரு பாடலுக்கு நடனமாடி இருக்கிறார். அதுமட்டுமல்ல ஜூலை மாதத்தில் இருந்து, அடுத்தடுத்த அப்டேட்களை வெளியிடப் படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

இதனிடையே, கூலி திரைப்படத்தின் முதல் பாதியை ரஜினிகாந்த் அண்மையில் பார்த்திருக்கிறார். அது முடிந்ததும் லோகேஷ் கனகராஜிடம் சென்று சூப்பர் சூப்பர் கண்ணா என்று அவர் மகிழ்ச்சியுடன் பேசி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இரண்டாம் பாதிக்கான எடிட்டிங் பணிகளும் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறதாம். ஏராளமான நட்சத்திரங்கள் படத்தில் இணைந்திருப்பதால் நிச்சயம் இது ஆயிரம் கோடி ரூபாயை வசூலிக்கும் என்று சினிமா விமர்சகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

சற்று முன்