தெலுங்கு சினிமாவில் முன்னணி நாயகியாக இருப்பவர் அனுஷ்கா ஷெட்டி. அருந்ததீ பாகுபலி பாகுபலி 2 போன்ற படங்கள் மாஸ் ஹிட் படங்களாக இருந்து அனுஷ்காவுக்கு மிகப்பெரிய வரவேற்பை அடையாளத்தை சினிமா ரசிகர்கள் மத்தியில் பெற்றுத் தந்தது. இந்த படங்கள் தமிழிலும் வெளியாகி தமிழ் பட ரசிகர்கள் மத்தியிலும் அனுஷ்கா கொண்டாடாடப்பட்டார்.
மேலும் தமிழில் பல படங்களில் அனுஷ்கா நடித்திருக்கிறார் குறிப்பாக ரஜினியுடன் லிங்கா விஜயுடன் வேட்டைக்காரன் மாதவனுடன் ரெண்டு சியான் விக்ரமுடன் தெய்வத் திருமகள் தாண்டவம் சூர்யாவுடன் சிங்கம் சிங்கம் 2 அஜீத்குமாருடன் என்னை அறிந்தால் ஆர்யாவுடன் இரண்டாம் உலகம் இஞ்சி இடுப்பழகி உள்ளிட்ட பல படங்களில் அவர் நடித்திருக்கிறார்.
இஞ்சி இடுப்பழகி படத்தில் உடல் பருமனான கேரக்டரில் நடிக்க வேண்டும் என்பதற்காக ஸ்லிம் ஆக இருந்த அனுஷ்கா, தனது உடல் எடையை 20 கிலோ வரை அதிகரித்து நடித்தார். அந்த படத்தின் மையக் கதையே உடல் பருமனான நாயகிதான். அதற்காக உடல் எடை அதிகரித்தார் அனுஷ்கா. ஆனால் அந்த படத்தில் நடித்த முடித்த பிறகு அவரது உடல் எடை குறையவில்லை. அதனால் பல ஆண்டுகளாக பட வாய்ப்புகளை அனுஷ்கா இழந்தார்.
இந்நிலையில் உடல் எடையை குறைத்த நடிகை அனுஷ்கா நடிப்பில் மிஸ் ஷெட்டி மிஸ்டர்பாலிஷெட்டி என்ற படம் சமீபத்தில் வெளியானது. இதையடுத்து தொடர்ந்து இயக்குனர் கிரீஸ் இயக்கத்தில் உருவான காதி என்ற படத்திலும், மலையாளத்தில் கத்தனார் காட்டு மந்திரவாதி என்ற படத்திலும் அனுஷ்கா இப்போது நடித்து வருகிறார். இதில் காதி படம் முடிவடைந்த நிலையில் வருகிற ஜூலை 11ம் தேதி அந்த படம் ரிலீசாக உள்ளது.
இந்த படங்களை அடுத்து தமிழில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் கைதி 2 படம் உருவாகிறது. இந்த படத்தில் சூர்யா வில்லனாகவும் கமல்ஹாசன் கேமியோ ரோலிலும் நடிக்க உள்ளனர். மேலும் கைதி 2 படத்தில் நடிகை அனுஷ்காவும் நடிப்பதாக சமீபத்தில் சமூக வலைதளங்களில் ஒரு தகவல் வைரலானது. ஆனால் இந்த தகவலை நடிகை அனுஷ்கா மறுத்திருக்கிறார்.
இதுகுறித்து நடிகை அனுஷ்கா கூறியதாவது, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் கைதி 2 படத்தில் நடிப்பதற்காக இதுவரை என்னை யாரும் அணுகவில்லை. யாரோ இப்படி ஒரு தவறான தகவலை பரப்பி உள்ளார்கள் என்று அதற்கு மறுப்பு தெரிவித்துக் கொள்கிறார். மேலும் இதற்கு முன் இயக்குனர் சுராஜ் இயக்கிய அலெக்ஸ் பாண்டியன் என்ற படத்தில் நடிகர் கார்த்திவுடன் அனுஷ்கா இணைந்து நடித்துள்ளார். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய 5 படங்களில் இதுவரை நடிகை அனுஷ்கா எந்த படத்தில் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.





