கோவையை அடுத்துள்ள வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் ஈஷா யோக மையம் அமைந்துள்ளது. இதன் நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் இருக்கிறார். இங்கு தியானலிங்கம் கோவில், லிங்க பைரவி கோவில், சூரிய தீர்த்த குண்டம், சந்திர தீர்த்த குண்டம் மற்றும் பல ஆயிரம் பேர் ஒரே நேரத்தில் அமரும் வகையில் பிரமாண்டமான தியான மண்டபம், மிக உயரமான ஆதியோகி சிலை உள்ளிட்டவை காணப்படுகின்றன.
இங்கு யோகா தியானம் பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. வெளிநாட்டினர் பலரும், இங்கு மாதக்கணக்கில் தங்கி யோக நிலைகளில் அடுத்தடுத்த பல பயிற்சி பெறுகின்றனர். சிலர் இங்கேயே சன்னியாசம் வாங்கி, சேவை செய்கின்றனர். இப்படி நூற்றுக்கணக்கானோர் இங்கு நிரந்தரமாக உள்ளனர்.
வழக்கமாக சாமியார்கள் நடத்தும் ஆசிரமங்கள், இதுபோன்ற மையங்கள் என்றாலே பலவிதமான சர்ச்சைகளும், விமர்சனங்கள் எழுவதுண்டு. இந்த யோக மையமும் அதற்கு தப்பவில்லை. பலவிதமான சர்ச்சைகள், விமர்சனங்கள் இந்த போதிலும் இங்கு வரும் மக்களின் கூட்டம் எப்போதும் குறைவது இல்லை. குறிப்பாக ஆண்டுதோறும் நடக்கும் மகாசிவராத்திரி விழாவில் இங்கு பல லட்சம் பேர் திரண்டு விடுகின்றனர்.
இந்த யோக மையத்துக்கு, அடிக்கடி இந்திய சினிமா நடிகர்கள், கிரிக்கெட் நட்சத்திரங்கள் வருகின்றனர். தமிழ் சினிமா சார்ந்த நடிகர், நடிகையர் பலரும் ஈஷா யோக மையம் வருவதும், அங்கு சத்குரு ஜக்கி வாசுதேவை சந்திப்பு அவர்களிடம் பல விஷயங்களை கேள்விகளாக கேட்பதும் அடிக்கடி நடக்கிறது.
இந்நிலையில் நடிகைகள் சமந்தா, கங்கனா ரெனாவத், தமன்னா போன்ற நடிகைகள் ஈஷா யோக மையத்துக்கு வருகின்றனர். சமீபத்தில் நடிகை சமந்தா ஈஷாவில் இருந்த புகைப்படங்களை வெளியிட்டார். மும்பையில் இருந்து கங்கனா ரெனாவத் ஈஷா யோக மையம் வந்து 3 நாட்கள் தங்கிவிட்டுச் சென்றார். தமன்னா அடிக்கடி வரும் இடமாகவும் ஈஷா உள்ளது.
இதுகுறித்து பத்திரிகையாளர் மற்றும் நடிகர் பயில்வான் ரங்கநாதன் வீடியோ ஒன்றில் கூறுகையில், நிம்மதியை தேடி, மன அமைதிக்காக அடிக்கடி சமந்தா, தமன்னா, கங்கனா ரெனாவத் ஆகியோர் அடிக்கடி ஈஷா யோக மையம் வந்து செல்கின்றனர். அந்த இடத்துக்கு நானும் ஏதேனும் தவறுகள் நடக்கும், குற்றங்கள் நடக்கும். அந்த தவறுகளை கண்டுபிடிக்கும் நோக்கத்தில்தான் நான் சென்றேன். ஆனால் அங்கு நல்ல வைப்ரேஷன் இருக்கிறது. என்னையே அது மாற்றிவிட்டது, என்று கூறியிருக்கிறார்.





