- Advertisement -
Homeபொழுதுபோக்குஅசிஸ்டென்ட் டைரக்டராக நான் நிறைய அவமானப்பட்டேன், அதிலும் அந்த டைரக்டர்….? வேதனைப்பட்ட நடிகர் மணிகண்டன் -...

அசிஸ்டென்ட் டைரக்டராக நான் நிறைய அவமானப்பட்டேன், அதிலும் அந்த டைரக்டர்….? வேதனைப்பட்ட நடிகர் மணிகண்டன் – என்ன கொடும சார் இது?

- Advertisement -

நடிகர் மணிகண்டன் இப்போது தமிழ் சினிமாவில் மிகவும் கவனிக்கப்படும் ஒரு நடிகராக வளர்ந்து வருகிறார். காதலும் கடந்து போகும் காலா ஜெய்பீம் குட்நைட் லவ்வர் படங்கள் மூலம் ரசிகர்களின் மத்தியில் அதிக வரவேற்பை பெற்ற மணிகண்டன், இப்போது குடும்பஸ்தன் என்ற படத்தில் நடித்திருக்கிறார். அந்த படம் நாளை ரிலீஸாகிறது.

மணிகண்டன் நடிக்க வருவதற்கு முன்பு, தமிழ் மற்றும் தெலுங்கு படங்களுக்கு டப்பிங் பேசியிருக்கிறார். அவரது நண்பர் டப்பிங் ஆர்ட்டிஸ்ட் என்பதால் அவருடன் சென்ற மணிகண்டனுக்கு, டப்பிங் தியேட்டர்களில் சில தெலுங்கு படங்கள், தமிழ் படங்களில் சின்ன சின்ன கேரக்டர்களுக்கு டப்பிங் பேச வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

அதன்பிறகு தெலுங்கு படங்களை பார்த்து தமிழிலும், தமிழ் படங்களை பார்த்து தெலுங்கிலும் டப்பிங் ரைட்டராகவும் மணிகண்டன் இருந்திருக்கிறார். அதே போல் தமிழ் படங்களில் ஸ்கிரிப்ட் ரைட்டராகவும், சில இயக்குனர்களிடம் அவர்கள் இயக்கிய படங்களில் உதவி இயக்குனராகவும் மணிகண்டன் பணிசெய்திருக்கிறார்.

சமீபத்தில் ஒரு நேர்காணல் நடிகர் மணிகண்டன் கூறுகையில், ஒரு இயக்குனரிடம் நான் உதவி இயக்குனராக பணிசெய்தேன். அவர் இயக்கிய படங்களில் உதவி இயக்குனராக இருந்தேன். ஒருமுறை அவரது வீட்டில் இருந்த போது அந்த இயக்குனரிடம் செல்போனை காணவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

அதனால் அவரது நம்பருக்கு நான் கால் செய்தேன். என்னுடைய போன் அழைப்பு அங்கிருந்த சோபாவில் இடுக்கு பகுதியில் அவரது போன் ரிங் சத்தம் கேட்டது. அந்த போனை நான் எடுக்க முயற்சித்த போது அந்த இயக்குனர் வேண்டாம் வேண்டாம் என்று தடுத்தார். இருந்தாலும் நான் அந்த சோபா இடுக்குக்குள் கைவிட்டு எடுத்து விட்டேன்.

அப்போது அவரது மொபைல் ஸ்கிரீனில் என்னுடைய பெயரை அவர் அடிமை 1 என்று பதிவு செய்திருந்தது தெரிய வந்தது. அப்படியே நொந்து போய்விட்டேன். உதவி இயக்குனரான என்னை அடிமை எண் 1 என அவர் சேவ் செய்து வைத்திருந்தது மிகப்பெரிய வேதனையை மன உளைச்சலை எனக்கு ஏற்படுத்தியது என்று, அந்த நேர்காணலில் நடிகர் மணிகண்டன் வருத்தமாக கூறியிருக்கிறார்.

சற்று முன்