- Advertisement -
Homeபொழுதுபோக்குஎன்ன கொடும சார் இது? - இளம் நடிகர்கள் கவின் மற்றும் அசோக் செல்வன் செய்யும்...

என்ன கொடும சார் இது? – இளம் நடிகர்கள் கவின் மற்றும் அசோக் செல்வன் செய்யும் அடாவடியால் நொந்துபோன தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் இளம் நடிகர்களாக இருப்பவர்கள் நல்ல படங்களில் நல்ல கேரக்டர்களில் நடித்து பின்னாளில் முன்னணி நடிகர்களாக மாறி விடுகின்றனர். ஆரம்பத்தில் லட்சங்களில் சம்பளம் வாங்கிய அவர்கள் பிறகு முன்னணி நட்சத்திரங்களாக மாறி கோடிக்கணக்கில் சம்பளத்தை வாங்கி குவிக்கின்றனர். இதுதான் தமிழ் சினிமாவில் வழக்கமாக இருக்கிறது.

நடிகர் சிவகார்த்திகேயன் சினிமாவில் முதலில் நாயகனாக அறிமுகமான படம் மெரினா. இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் அவர் நடித்த இந்த படத்தில் அவர் வாங்கிய சம்பளம் ரூ. 10 ஆயிரம்தான். ஆனால் 12 ஆண்டுகள் கழிந்த நிலையில் இப்போது அவர் பராசக்தி படத்தில் நடிக்க வாங்கிய சம்பளம் ரூ. 70 கோடி என்று சொல்லப்படுகிறது. ஏனென்றால் அந்தளவுக்கு அவர் நடித்த படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு இருக்கிறது.

- Advertisement -

பரோட்டா சாப்பிடும் காமெடி காட்சியில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானவர் நடிகர் சூரி. இன்று அவர் நடித்த 4 படங்களில் 3 படங்கள் பெரிய வெற்றியை பெற்ற நிலையில் மாமன் படத்துக்கு அவர் வாங்கிய சம்பளம் ரூ. 8 கோடி என்று சொல்லப்படுகிறது. இப்படி தனது நடிப்பு திறமையால் தமிழ் சினிமாவில் சந்தானம் யோகிபாபு என பல நடிகர்கள் பெரிய வளர்ச்சியை கண்டிருக்கிறார்.

இந்நிலையில் இப்போதைய வளரும் இளம் நடிகர்களாக தமிழ் சினிமாவில் இருப்பவர்கள் நடிகர்கள் அசோக் செல்வன் மற்றும் கவின். இதுவரை இவர்கள் நடித்த படங்கள் ஒன்றிரண்டை தவிர பெரிய அளவில் அதிக படங்களில் அவர்கள் ஜெயிக்கவில்லை. கவின் நடித்த படங்களில் டாடா லிப்ட் ஸ்டார் ஆகிய படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கின்றன.

- Advertisement -

அதே போல் அசோக் செல்வன் நடித்த தெகிடி போர்த்தொழில் ஓ மை கடவுளே ஆகிய படங்கள் ரசிகர்களின் வரவேற்பை பெற்றன. போர்த்தொழில் படம் மாஸ் ஹிட் படமாக இருந்தாலும் அதில் இன்னொரு ஹீரோவாக நடிகர் சரத்குமார் நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மற்றபடி கவின் அசோக் செல்வன் இருவரும் ஹீரோவாக இன்னும் உச்சம் தொட வேண்டிய வளரும் இளம் நடிகர்களாக தான் உள்ளனர்.

சமீபத்தில் அசோக் செல்வன் நடித்த தக்லைஃப் படம் பெரிய வெற்றியை பெறவில்லை. கவின் நடித்த பிளடி பெக்கர் படம் பிளாப் ஆனது. கிஸ் படமும் வியாபாரம் ஆகாமல் முடங்கி உள்ளது. இந்நிலையில் கவின் ரூ. 5 கோடி சம்பளம் கேட்கிறார். அதே போல் அசோக் செல்வனும் 23 படங்களில் நடித்து விட்டேன் என்று கவின் மாதிரியே எனக்கும் சம்பளம் வேண்டும் என்கிறார். இதனால் தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் நொந்து போயுள்ளனர்.

- Advertisement -

சற்று முன்