- Advertisement -
Homeபொழுதுபோக்குஇந்த முறை ரஜினிகாந்த் படத்தில் குத்தாட்டம் போடும் வாய்ப்பு யாருக்கு? அட அந்த நடிகை தானா?...

இந்த முறை ரஜினிகாந்த் படத்தில் குத்தாட்டம் போடும் வாய்ப்பு யாருக்கு? அட அந்த நடிகை தானா? – தர்மன் படம் குறித்து வெளியான லேட்டஸ்ட் அப்டேட்!

- Advertisement -

நடிகர் ரஜினிகாந்த் இப்போது தர்மன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இது அவரது 173வது படம். நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் உருவாகும் இந்த படத்தை அஸ்வத் மாரிமுத்து டைரக்ட் செய்கிறார். இந்த படத்துக்கு சாய் அபயங்கர் இசையமைக்க உள்ளார்.

இப்போது நட்சத்திர ஹீரோக்களின் படங்களில் பிரபல நடிகைகள் ஒரு பாடலுக்கு மட்டும் குத்தாட்டம் போடுவது டிரண்ட் ஆகி விட்டது. ஐட்டம் சாங் என்ற அழைக்கப்படும் அந்த ஒரு பாடலுக்கு மட்டும் 2 கோடி 3 கோடி ரூபாய் என சம்பளம் வாங்கிக்கொண்டு பிரபல நடிகைகள் குத்தாட்டம் போடுகின்றனர்.

- Advertisement -

அந்த வரிசையில் சமந்தா ஆடிய ஊ சொல்றியா மாமா பாடலும் ஜெயிலர் படத்தில் தமன்னா ஆடிய காவலய்யா பாடலும் கூலி படத்தில் பூஜா ஹெக்டே ஆடிய மோனிகா பாடலும் தி கோட் படத்தில் திரிஷா ஆடிய மட்ட பாடலும் பெரிய அளவில் ஹிட் ஆனது குறிப்பிடத்தக்கது.

அந்த வரிசையில் இப்போது நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் 2 படத்தில் ஒரு குத்தாட்ட பாட்டுக்கு நடிகைகள் பூர்ணா மற்றும் நேரா பதேஹி ஆகியோர் குத்தாட்டம் போட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த வரிசையில் இப்போது தர்மன் படத்திலும் ஒரு பிரபல இளம் நடிகை குத்தாட்டம் போட இருப்பதாக லேட்டஸ்ட் தகவல் கிடைத்துள்ளது.

- Advertisement -

தர்மன் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிகை சிம்ரன் நடிக்கிறார். பேட்ட படத்தை தொடர்ந்து 2 முறையாக சிம்ரன் இந்த படத்திலும் ரஜினியுடன் இணைந்து நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் நடிகை ஸ்ரேயாவும் கௌரவ தோற்றத்தில் நடிக்க உள்ளார். ஏற்கனவே சிவாஜி படத்தில் ரஜினிக்கு ஸ்ரேயா ஜோடியாக நடித்திருந்தார்.

மேலும் இந்த படத்தில் ராஷிக்கண்ணா ரஜினிக்கு மகளாகவும் தெலுங்கு நடிகர் ராம் பொத்தேனியும் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். அத்துடன் இந்த படத்தில் டைரக்டர் அஸ்வத் மாரிமுத்துவும் ஒரு கேமியோ ரோலில் நடிக்க திட்டமிட்டுள்ளார். இந்த சூழலில் நடிகை கயாடு லோஹர் தர்மன் படத்தில் ஒரு ஐட்டம் பாடலுக்கு குத்தாட்டம் போட இருப்பதாக லேட்டஸ்ட் அப்டேட் கிடைத்துள்ளது.

- Advertisement -

சற்று முன்