- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் ரவிமோகன் டைரக்ட் செய்து வரும் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகும் பிரபலம் யார் தெரியுமா? அட...

நடிகர் ரவிமோகன் டைரக்ட் செய்து வரும் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகும் பிரபலம் யார் தெரியுமா? அட இந்த டிவிஸ்ட் வேற லெவலா இருக்குதே?

- Advertisement -

தமிழ் சினிமாவில் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர் நடிகர் ரவிமோகன். ஜெயம் என்ற படம் மூலம் ஹீரோவாக அறிமுகமான அவர் பிறகு ஜெயம் ரவி என்றே அழைக்கப்பட்டார். சமீபத்தில் தான் அவர் தனது பெயரை ரவிமோகன் என மாற்றிக்கொண்டார். நடிகராக மட்டுமின்றி இயக்குனர் தயாரிப்பாளர் என அவர் மாறியிருக்கிறார்.

கடந்த 2 ஆண்டுகளாக தனது மனைவி ஆர்த்தி மற்றும் தனது பிள்ளைகளை பிரிந்து வாழ்ந்து வரும் நடிகர் ரவிமோகன், விவாகரத்து கேட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருக்கிறார். அந்த வழக்கு விசாரணை நிலுவையில் இருந்து வருகிறது. எனினும் தனது மகன்கள் மட்டும் தான் தனது உலகம் என்றும் நடிகர் ரவிமோகன் கூறி வருகிறார்.

- Advertisement -

இதற்கிடையே பாடகி கெனிஷா என்பவருடன் நடிகர் ரவிமோகன் நெருக்கமான நட்பில் இருந்து வந்தார். இருவரும் கோவில்கள் திருமண விழாக்கள் மற்றும் பொது நிகழ்வுகளில் ஒன்றாக பங்கேற்று ஜோடியாக வலம் வந்தனர். இது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியது.

ஒரு கட்டத்தில் இது பெரும் சர்ச்சையான நிலையில் பாடகி கெனிஷா, சென்னையை விட்டு சென்றதாகவும் நடிகர் ரவிமோகனை அவர் பிரிந்து விட்டதாகவும் இணையத்தில் தகவல் பரவியது. அப்போது செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரவிமோகன் ஆவேசமாக பேசினார். 3 எழுத்து பூ நடிகை தான் தன் குடும்ப பிரச்னைகளுக்கு காரணம் என்றும் கொதிப்பாக பேசியது பரபரப்பானது.

- Advertisement -

எனினும் தன் பிரச்னைகளை எல்லாம் ஓரம்கட்டி வைத்துவிட்டு இப்போது படங்களில் நடிப்பதிலும் அவர் படங்கள் தயாரித்து இயக்கவதிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். ரவி மோகன் ஸ்டுடியோஸ் சார்பில் நடிகர் யோகிபாபு ஹீரோவாக நடிக்கும் இன் ஆர்டினரி மேன் என்ற படத்தை ரவிமோகன் டைரக்ட் செய்து வருகிறார்.

இந்த படத்தின் இசையமைப்பாளர் யார் என்றால் நடிகர் ரவிமோகனின் நெருங்கிய தோழி பாடகி கெனிஷா தான் என்ற லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது. இவர் ஒரு மேடைப்பாடகி மட்டுமல்ல, பல இசை ஆல்பங்களிலும் பாடியிருக்கிறார். இந்த படத்தில் முதன்முறையாக அவர் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். இது ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

சற்று முன்