- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் மம்முட்டியை தொடர்ந்து நடிகர் மோகன்லாலும் செய்த தரமான சம்பவம்.. ஆனா இது கேரளாவில் அல்ல...

நடிகர் மம்முட்டியை தொடர்ந்து நடிகர் மோகன்லாலும் செய்த தரமான சம்பவம்.. ஆனா இது கேரளாவில் அல்ல ஊட்டியில்!

- Advertisement -

மலையாள சினிமாவில் நடிகர்கள் மம்முட்டி மோகன்லால் இருவருமே சூப்பர் ஸ்டார்கள்தான். அது மட்டுமின்றி, இருவருமே மிகவும் நெருக்கமான நண்பர்கள். சமீபத்தில் மம்முட்டி உடல் நலம் பாதிக்கப்பட்ட போது சபரிமலைக்கு இருமுடியேந்தி சென்ற நடிகர் மோகன்லால், மம்முட்டிக்காக சிறப்பு வழிபாடு நடத்தி ஐயப்ப சுவாமியை வழிபட்டது குறிப்பிடத்தக்கது.

நடிகர் மம்முட்டிக்கு கொச்சி பனம்பள்ளி நகரில் சொந்தமான வீடு உள்ளது. ஆனால் சில ஆண்டுகளுக்கு முன்பே அந்த வீட்டை மம்முட்டி காலி செய்துவிட்டு வேறு வீட்டுக்கு குடும்பத்துடன் குடிபெயர்ந்து மாறி விட்டார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொச்சி பனம்பள்ளி நகரில் உள்ள தான் முன்பு வசித்து வந்த வீட்டை கெஸ்ட் ஹவுஸ் ஆக மாற்றினார்.

- Advertisement -

அந்த வீட்டை வெளியூர்களில் இருந்து கேரளா வரும் சுற்றுலா பயணிகளுக்கு தினசரி வாடகை 75 ஆயிரம் ரூபாய் என்ற அடிப்படையில் வாடகைக்கு விட்டுள்ளார். நடிகர் மம்முட்டி வீட்டில் சென்று தங்குகிறோம் என்று ஆர்வத்திலேயே தினசரி பலரும் கொச்சியில் உள்ள மம்முட்டி வீட்டை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.

அதே போல் நடிகர் மோகன்லாலும் இப்போது தனது கெஸ்ட் ஹவுஸ் ஒன்றை சுற்றுலா பயணிகளுக்காக தினசரி வாடகைக்கு விட்டு உள்ளார். ஆனால் இது கேரளாவில் அல்ல, ஊட்டியில் என்பது குறிப்பிடத்தக்கது. ஊட்டியில் இருக்கும் அவரது கெஸ்ட் ஹவுஸைதான். இதற்கு தினசரி 37 ஆயிரம் ரூபாய் வாடகையாக வசூலிக்கப்படுகிறது. இதில் 3 தங்கும் அறைகள் உட்பட அனைத்து விதமான வசதிகளும் இருக்கின்றன.

- Advertisement -

ஒரு ஓவிய கேலரி விளையாட்டு ஒன்றும் அங்கே பார்வையாளர்களுக்கு வைக்கப்பட்டுள்ளது. மரைக்காயர் படத்தில் அவர் பயன்படுத்திய டம்மி துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களை அங்கேதான் பொருட்காட்சி போல பார்வைக்கு வைத்திருக்கிறார் மோகன்லால். அதுவும் சுற்றுலா பயணிகளை கவரும். மேலும் கடந்த பல ஆண்டுகளாக நடிகர் மோகன்லால் ஊட்டிக்கு வந்தால் இந்த கெஸ்ட் ஹவுஸ்சில்தான் தங்குவது வழக்கம்.

அப்படி மோகன்லால் அங்கு தங்கும்போதெல்லாம் அவருக்கு விதவிதமான உணவுகளை சமைத்து போட்ட அவருடைய ஆஸ்தான சமையல்காரரும் இங்கு தான் உள்ளார். இப்போது அங்கே மோகன்லால் கெஸ்ட் ஹவுஸில் தங்குகின்ற சுற்றுலா பயணிகளுக்கு அவர்கள் தேவைக்கேற்ப உணவு சமைத்து கொடுக்கவும் அந்த சமையல்காரர்தான் நியமிக்கப்பட்டுள்ளார். இப்போது இருந்து அங்கே தங்குவதற்கு புக்கிங் செய்ய மோகன்லால் ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்