- Advertisement -
Homeபொழுதுபோக்குதேசிய விருதை தவறவிட்டு சோகத்தில் மூழ்கிய மகேஷ் பாபு, பேசாம அன்னைக்கே அந்த படத்துக்கு ஓகே...

தேசிய விருதை தவறவிட்டு சோகத்தில் மூழ்கிய மகேஷ் பாபு, பேசாம அன்னைக்கே அந்த படத்துக்கு ஓகே சொல்லியிருக்கலாம்

- Advertisement -

சில நாட்களுக்கு முன்பு 69 ஆவது தேசிய விருதுகள் பெறும் திரைப்படங்களுக்கான அறிவிப்பு வெளிவந்தது. இதில் தமிழில் “கடைசி விவசாயி” திரைப்படத்திற்கு சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டது. அதே போல் இத்திரைப்படத்தில் மாயாண்டி கதாபாத்திரத்தில் நடித்த மறைந்த நடிகர் நல்லாண்டியின் பெயர் “Special Mention” என்ற பிரிவில் இடம்பெற்றிருந்தது.

மேலும் ராஜமௌலி இயக்கத்தில் மிக பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்ட “RRR” திரைப்படத்திற்கு 6 பிரிவுகளில் தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டது. மேலும் சிறந்த நடிகருக்கான விருது “புஷ்பா” திரைப்படத்திற்காக அல்லு அர்ஜூனுக்கு அறிவிக்கப்பட்டது.

- Advertisement -

இந்த நிலையில் “புஷ்பா” திரைப்படத்திற்காக அல்லு அர்ஜூனுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைக்கவுள்ளதை ஆந்திர திரையுலகினர் கொண்டாடி வரும் நிலையில், தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு மிகவும் கவலையில் இருக்கிறாராம்.

அதாவது “புஷ்பா” திரைப்படத்தில் முதலில் நடிக்க வேண்டியது மகேஷ் பாபுவாம். இத்திரைப்படத்தின் இயக்குனரான சுகுமாரிடம் மகேஷ் பாபு சண்டை போட்டுவிட்டாராம். ஆதலால்தான் மகேஷ் பாபு “புஷ்பா” திரைப்படத்தில் நடிக்கவில்லையாம். ஒரு வேளை நடித்திருந்தால் நாமும் தேசிய விருது வாங்கியிருப்போமே என்று மகேஷ் பாபு தற்போது கவலையில் இருக்கிறாராம்.

- Advertisement -

“புஷ்பா” திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்றதை தொடர்ந்து தற்போது “புஷ்பா 2” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதில் அல்லு அர்ஜூனுடன் ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் ஆகியோர் நடித்து வருகின்றனர். “புஷ்பா 2” திரைப்படம் வருகிற 2024 ஆம் ஆண்டு பேன் இந்தியா திரைப்படமாக வெளிவரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

- Advertisement -

சற்று முன்