- Advertisement -
Homeபொழுதுபோக்குஜெயிலர் படத்தின் சிறப்பு காட்சியை தடை செய்ததற்கு இதுதான் காரணம், பின்னணியை உடைத்த பிரபல தயாரிப்பாளர்

ஜெயிலர் படத்தின் சிறப்பு காட்சியை தடை செய்ததற்கு இதுதான் காரணம், பின்னணியை உடைத்த பிரபல தயாரிப்பாளர்

- Advertisement -

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த “ஜெயிலர்” திரைப்படம் வருகிற 10 ஆம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வர உள்ளது. இத்திரைப்படத்திற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது மிக மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின் அட்டகாசமான Showcase சமீபத்தில் வெளிவந்தது. அதனை வைத்து பார்க்கும்போது இத்திரைப்படம் முழுக்க முழுக்க சென்டிமென்ட் கலந்த ஆக்சன் திரைப்படமாக உருவாகியுள்ளதாக தெரிய வருகிறது.

சில ஆண்டுகளாகவே டாப் நடிகர்களின் திரைப்படங்களுக்கு அதிகாலை 1 மணி அல்லது காலை 4 மணி காட்சிகள் திரையிடப்படுவது வழக்கமாக இருந்தது. ஆனால் “வாரிசு”, “துணிவு” திரைப்படம் வெளிவந்த நாளில் ஸ்பெஷல் ஷோவின்போது நடந்த எதிர்பாராத மரணம் பலரையும் உலுக்கியது. மேலும் சிறப்புக் காட்சிக்கு பல ஆயிரங்கள் டிக்கெட் வசூலிப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த நிலையில் “ஜெயிலர்” திரைப்படத்திற்கு சிறப்புக் காட்சிகள் கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட தயாரிப்பாளரும் திரைப்பட விநியோகஸ்தர் சங்கத்தலைவரும் ஆன கே.ராஜன், “ஜெயிலர்” திரைப்படத்தின் ஸ்பெஷல் காட்சி ரத்து செய்தது குறித்தான பின்னணியை பகிர்ந்துகொண்டுள்ளார்.

அதாவது 15 நாட்களுக்கு முன்பு கே.ராஜன், திரையரங்கு உரிமையாளர் சங்கத் தலைவர் உட்பட பலரும் தமிழக முதல்வர் முக ஸ்டாலினை சென்று சந்தித்து பேசினார்களாம். அப்போது முதல்வரிடம் 5 வேண்டுகோள்களை வைத்தார்களாம். அதில் ஒன்று, காலை 9 மணியில் இருந்து இரவு இரண்டு மணி வரையும் திரைப்படங்களை திரையிட அனுமதிக்குமாறும், கணக்கு வழக்குகள் ஒழுங்காக வரும், மக்களும் மிக தைரியமாக திரையரங்கிற்கு வருவார்கள் என்று கூறினார்களாம். இந்த வேண்டுகோளுக்கு இணங்க முதல்வர் காலை 9 மணி காட்சியை முதல் காட்சியாக திரையிடவேண்டும் என உறுதிபடுத்தினார்களாம். இதில் எந்த உள்நோக்கமும் அரசியலும் இல்லை என்று கே.ராஜன் கூறியுள்ளார்.

சற்று முன்