தமிழ் சினிமாவில் ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒரு நடிகராக இருப்பவர் நடிகர் சியான் விக்ரம். நடிகர் கமல்ஹாசனுக்கு அடுத்தபடியாக நடிப்புக்காக கேரக்டருக்காக மெனக்கெடும் ஒரே கலைஞர் என்றால் அது விக்ரம்தான். அதற்காக அவர் பல விதங்களில் தன் உடலை வருத்திக்கொண்டு நடிப்பார்.
குறிப்பாக சேது காசி அந்நியன் ஐ தங்கலான் என பல படங்களில் அவரது நடிப்பு வேற லெவலில் இருக்கும். உடல் எடையை பாதியாக குறைத்துக் கொண்டும் நடிப்பார். தேவைப்பட்டால் உடல் எடையை 2 மடங்கு அதிகரிக்க செய்தும் நடிப்பார். கேரக்டருக்காக எப்படி வேண்டுமானாலும் தனது தோற்றத்தை மாற்றிக்கொள்வதில் வித்தகர்தான் சியான் விக்ரம்.
காசி படத்தில் பார்வையற்றவராக நடித்த விக்ரமை பார்த்து, அந்த பையன் கண் பார்வை இல்லாம எப்படி நடிச்சிருக்கான் பாருங்க என்று அருகில் அமர்ந்து தியேட்டரில் படம் பார்த்த ஒரு பெரியவர், விக்ரமிடமே கூறியிருக்கிறார். அதை கேட்டு விக்ரம் தேம்பி தேம்பி அழுதிருக்கிறார். ஏனெனில் இப்படியே சில தினங்கள் நடித்தால் உங்கள் கண்பார்வையே போய்விடும் என டாக்டர் எச்சரித்தும் அப்படியே நடித்திருக்கிறார் விக்ரம்.
இயக்குனர் பாலா இயக்கத்தில் கடந்த 1999ம் ஆண்டில் டிசம்பர் 10ம் தேதி வெளியான படம் சேது. இதுதான் சியான் விக்ரமுக்கு நடிகராக அறிமுகம் தந்த படம். இதற்கு பின்புதான் அவரது திரை பயணம் வெற்றிப் பாதையில் துவங்கியது. இயக்குனர் பாலாவுக்கும் இதுதான் முதல் படம். இளையராஜா இசையமைத்து இருந்தார். இந்த படத்தில் சிவக்குமார் அபிதா ஸ்ரீமன் உள்ளிட்டோரும் நடித்திருந்தனர்.
இந்த படம் பெரிய அளவில் வரவேற்பை வெற்றியை பெற்றது. இந்த படத்துக்கு நிறைய விருதுகளும் கிடைத்தது. இந்த படம் பெரிய அளவில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. குறிப்பாக சியான் விக்ரம் என்ற அடைமொழியும் விக்ரமுக்கு கிடைத்தது. இன்னும் அவர் நடித்த படங்களில் சேது படத்துக்குதான் முதலிடம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சேது படம் வெளியாகி 25 ஆண்டுகள் ஆன நிலையில், சேது படம் விரைவில் ரி ரிலீஸ் செய்யப்பட உள்ளது. சமீபத்திய விக்ரம் படங்கள் எதுவும் பெரிய அளவில் வரவேற்பை பெறாத நிலையில் சேது படம் தியேட்டர்களில் ரி ரிலீஸ் செய்யப்படுவது அவரது ரசிகர்களுக்கு உற்சாகத்தை தந்துள்ளது. மிக விரைவில் சேது படத்தின் ரி ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவிக்க உள்ளனர்.





