- Advertisement -
Homeபொழுதுபோக்குஅதை பார்த்த போது மிகவும் வலித்தது, நான் சிறந்த தேசிய விருது வாங்க முடிவு செய்ய...

அதை பார்த்த போது மிகவும் வலித்தது, நான் சிறந்த தேசிய விருது வாங்க முடிவு செய்ய காரணம் அதுதான் – அட இப்படி ஒரு விஷயத்தை யாருமே எதிர்பார்க்கலையே?

- Advertisement -

மத்திய அரசு ஆண்டுதோறும் கலைத்துறையில் சிறந்து விளங்கிய நடிகர் நடிகைகள் இயக்குனர்கள் ஒளிப்பதிவாளர்கள் பாடகர்கள் பாடகிகள் கவிஞர்கள் என கலைத்துறை சார்ந்த பலருக்கும் தேசிய விருது வழங்கி கௌரவித்து வருகிறது.

தமிழ் சினிமாவில் நடிகர் கமல்ஹாசன் இதுவரை சிறந்த நடிகர் என 3 முறை தேசிய விருது பெற்றிருக்கிறார். கவிஞர் வைரமுத்து சிறந்த பாடலாசிரியர் என 6 முறை தேசிய விருது பெற்றிருக்கிறார். அதேபோல் நடிகைகள் பிரியாமணி நித்யா மேனன் சுகாசினி அர்ச்சனா உள்ளிட்ட பலர் மிகச் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி சிறந்த நடிகை தேசிய விருது பெற்றுள்ளனர்.

- Advertisement -

அதேபோல் பாடகர்களில் எஸ் பி பாலசுப்ரமணியம் கே ஜே ஜேசுதாஸ் போன்றவர்களும் சிறந்த பாடகர்கள் என தேசிய விருது பெற்றுள்ளனர். பாடகி சித்ரா சிறந்த பாடகி என தேசிய விருது பெற்றிருக்கிறார். அதேபோல் மலையாளம், இந்தி என பிறமொழி கலைஞர்களும் தேசிய விருது பெற்றிருக்கின்றனர்.

இந்நிலையில் புஷ்பா படம் மூலம் இந்திய சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றவர் அல்லு அர்ஜுன். தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகராக இருந்து வருகிறார். அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த 2021ம் ஆண்டில் வெளியான படம் புஷ்பா.

- Advertisement -

இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று பிளாக்பஸ்டர் மூவியாக அமைந்தது. இந்த படத்தில் நடித்ததற்காக நடிகர் அல்லு அர்ஜுனுக்கு சிறந்த நடிகர் தேசிய விருது வழங்கப்பட்டது. இந்த படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து தற்போது புஷ்பா 2 படம் உருவாகி வருகிறது. இந்தப் படம் வருகிற டிசம்பர் 5ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

சமீபத்தில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்ட நடிகர் அல்லு அர்ஜுன் இதுகுறித்து பகிர்ந்துள்ளார். நடிகர் அல்லு அர்ஜுன் கூறுகையில், யார் யாரெல்லாம் சிறந்த நடிகர் தேசிய விருது பெற்றிருக்கிறார்கள் என்று ஒருமுறை பட்டியலை பார்த்தேன். அந்தப் பட்டியலில் ஒரு தெலுங்கு நடிகர் பெயர் கூட இல்லை. அது எனக்கு மிகவும் வலித்தது. அதன் பின்னர்தான் தேசிய விருது பெற முடிவு செய்தேன் என்று வெளிப்படையாக கூறி இருக்கிறார். இதன் மூலம் மத்திய அரசின் சிறந்த நடிகர் விருது பெற்ற முதல் தெலுங்கு நடிகர் என்ற பெருமையை அல்லு அர்ஜுன் பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்