- Advertisement -
Homeபொழுதுபோக்குஈயடிச்சான் காப்பி என்பது இதுதானா? ராஜமௌலி படத்தை தழுவி எடுக்கப்பட்டதா லவ்லி மலையாள படம்? -...

ஈயடிச்சான் காப்பி என்பது இதுதானா? ராஜமௌலி படத்தை தழுவி எடுக்கப்பட்டதா லவ்லி மலையாள படம்? – லீகல் நோட்டீஸ் அனுப்பிய படக்குழு!

- Advertisement -

தெலுங்கு சினிமாவின் பிரமாண்ட இயக்குனர் ராஜமௌலி. பாகுபலி பாகுபலி 2 ஆர்ஆர்ஆர் போன்ற பான் இந்தியா படங்களை இயக்கி இந்திய சினிமாவில் முன்னணி நட்சத்திர இயக்குனராக இருப்பவர். கடந்த 2012ம் ஆண்டில் ராஜமௌலி இயக்கத்தில் தெலுங்கு மற்றும் வெளியான படம், தமிழில் நான் ஈ என்றும் தெலுங்கில் ஈகா என்ற பெயரிலும் வெளியானது.

இந்த படத்தில் நடிகர் நானி நாயகனாக நடித்திருந்தார். நாயகியாக சமந்தா நடித்திருந்தார். சுதீப் பணக்கார வில்லனாக நடித்திருந்தார். சமந்தா மீது ஆசைப்படும் சுதீப், சமந்தாவின் காதலர் நானியை கொன்று விடுகிறார். பிறகு நானி சுதீப்பை பழிவாங்க ஈ ஆக வந்து பழிவாங்குவதே நான் ஈ படத்தின் கதை. இந்த படம் தமிழ், தெலுங்கில் பெரிய வரவேற்பை வெற்றியை பெற்றது.

- Advertisement -

இந்நிலையில் மலையாளத்தில் சில வாரங்களுக்கு முன்பு வெளியான படம் லவ்லி. இந்த படத்தில் நடிகர் மேத்யூ தாமஸ் ஹீரோவாக நடித்திருந்தார். லியோ படத்தில் நடிகர் விஜய்யின் மகனாக நடித்தவர் தான் மேத்யூ தாமஸ் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் வரும் ஒரு பெண் கேரக்டர் ஈ ஆக சித்தரிக்கப்பட்டுள்ளது. படம் முழுவதும் அந்த ஈ கேரக்டர் வருவது போல் விஎப்எக்ஸ் முறையில் படம் உருவாக்கப்பட்டுள்ளது.

லவ்லி படத்துக்கு பெரிய அளவில் மலையாள சினிமாவில் வரவேற்பு கிடைக்கவில்லை. அதே நேரத்தில் இந்த படத்தின் போஸ்டர்கள் டீசர் பாடல் வெளியான போதே ஏற்கனவே வெளியான ராஜமௌலியின் ஈகா படத்தின் சாயல் இந்த படத்தில் தெரிகிறது என்று பலரும் கூறினர். ஆனால் லவ்லி கதையில் நிறைய மாற்றம் இருக்கிறது என்று லவ்லி படக்குழுவினர் விளக்கம் தந்தனர். படம் வெளியான பிறகு ஈகா படத்திற்கும் லவ்லி படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று தெரிய வந்தது.

- Advertisement -

ஆனால் தற்போது லவ்லி படம் ஓடிடி தளத்தில் வெளியான நிலையில் புதிய பிரச்னை ஒன்று எழுந்துள்ளது. அதாவது ஈகா படத்தில் பயன்படுத்தப்பட்ட ஈயின் உருவ அமைப்பை காப்பியடித்து லவ்லி படக்குழுவினர் தங்களது ஈே கேரக்டரை உருவாக்கி இருப்பதாக ஈகா பட தயாரிப்பாளர் தரப்பிலிருந்து தற்போது லவ்லி பட குழுவிற்கு லீகல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இது குறித்து லவ்லி படத்தின் இயக்குனர் திலீஷ் நாயர் கூறியதாவது, ஈகா பட தயாரிப்பு தரப்பில் இருந்து இப்படி ஒரு குற்றம் சுமத்தி இருப்பது மிகவும் வருத்தம் அடையச் செய்கிறது.

எங்களுடைய தொழில்நுட்பக் குழுவினர் கிட்டத்தட்ட 3 மாத காலமாக இந்த ஈ உருவத்தை வடிவமைப்பதற்காக கடுமையாக உழைத்தனர். அதிலும் குறிப்பாக நடிகை உன்னிமாயா பிரசாத்தின் முகத்தை அடிப்படையாக வைத்து மோஷன் கேப்சரிங் முறையில் இந்த ஈ கதாபாத்திரம் உருவாக்கப்பட்டது. ஒரு குடும்பப்பாங்கான பெண் ஈ கதாபாத்திரமாகவே இதை உருவாக்கி இருக்கிறோம். ஈகா படத்தில் வருவது போல் இது ஆண் ஈ கதாபாத்திரமல்ல, பெண் ஈ கதாபாத்திரம் என்றும் திலீஷ் நாயர் விளக்கம் அளித்துள்ளார்.

- Advertisement -

சற்று முன்