- Advertisement -
Homeபொழுதுபோக்குஅடுத்த படத்தை தயாரிக்க தயாரான லோகேஷ் கனகராஜ்... அறிவிப்பு வெளியாகி போச்சு... ஆனால் அவர் உயிர்...

அடுத்த படத்தை தயாரிக்க தயாரான லோகேஷ் கனகராஜ்… அறிவிப்பு வெளியாகி போச்சு… ஆனால் அவர் உயிர் நண்பர் படத்தில் இல்லையே…

- Advertisement -

மாநகரம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். அங்கிருந்து, கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ ஆகிய திரைப்படங்களை இயக்கினார். இதன் மூலம் தமிழ் சினிமாவில் மட்டுமல்ல இந்திய சினிமாவிலேயே மோஸ்ட் வான்டட் இயக்குனர்கள் பட்டியலில் இணைந்தார்.

தற்போது அடுத்ததாக அவர் ரஜினியை வைத்து படம் எடுக்க இருக்கிறார். சூப்பர் ஸ்டாரின் 171 வது திரைப்படமாக இது உருவாகிறது. இதன் படப்பிடிப்பு, ஜூன் மாதம் தொடங்குகிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார்.

- Advertisement -

இப்படி இயக்கத்தில் பிசியாக இருக்கும் லோகேஷ் கனகராஜ், படத்தை தயாரிப்பதிலும் ஈடுபட்டு வருகிறார். இதற்காக ஜி புரொடக்ஷன்ஸ் என்னும் நிறுவனத்தை வர ஆரம்பித்துள்ளார். இந்த நிறுவனத்தின் முதல் திரைப்படமாக, ஃபைட் கிளப் படம் வெளியானது.

உறியடி திரைப்படத்தை எடுத்திருந்த விஜயகுமார் தான் இதில் நடிகர். மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த திரைப்படம், அந்த அளவுக்கு வரவேற்பைப் பெறவில்லை. இரண்டாம் பாதி மிகவும் தொய்வுடன் இருந்ததால் படத்திற்கு வரவேற்பு கிடைக்கவில்லை. இப்படியான சூழலில், அவர் தொடர்ந்து படத்தை தயாரிக்க உள்ளதாக கூறி வந்தார்.

- Advertisement -

அடுத்ததாக அவர் தனது நண்பர் ரத்னகுமார் இயக்கம் திரைப்படத்தை தயாரிப்பதாக இருந்தது. இதில் கதாநாயகனாக ராகவா லாரன்ஸ் நடிப்பதாகவும், நயன்தாராவும் படத்தில் இருக்கிறார் என்றும் கூறப்பட்டது. ஆனால் சில பல காரணங்களால், நயன்தாரா படத்திலிருந்து வெளியேறினார். ஹாரர் திரைப்படமாக இது உருவாக இருந்தது.

இந்த நிலையில் தற்போது அது குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதன்படி படத்திற்கு பென்ஸ் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. சொன்னபடியே இதில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கிறார். ஆனால் இயக்குனர் திடீரென மாறி இருக்கிறார். ரத்னகுமாருக்கு பதில் பாக்யராஜ் கண்ணன் என்பவர் இந்த திரைப்படத்தை எடுக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாக்யராஜ் கண்ணனுக்கு இதற்கு முன்னதாக ரெமோ மற்றும் சுல்தான் ஆகிய திரைப்படங்களை இயக்கியிருந்தார். இப்படியான சூழலில் தான் அவர், ராகவா லாரன்ஸ் உடன் இணைந்து இருக்கிறார். இது வரவேற்பை பெற்றாலும் எதற்காக ரத்னகுமார் படத்திலிருந்து வெளியேறினார் என்ற கேள்வி திரை துறை வட்டாரத்தில் எழுந்துள்ளது.

- Advertisement -

சற்று முன்