நடிகர் சந்தானம் தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வந்தவர். பிறகு வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படம் மூலம் கதாநாயகனாக மாறினார். தொடர்ந்து சபாபதி வடக்குப்பட்டி ராமசாமி தில்லுக்கு துட்டு டிடி ரிடர்ன்ஸ் பாரிஸ் ஜெயராஜ் குலுகுலு ஜிம்கானா ஏ ஒன் டிக்கிலோனா என பல படங்களில் ஹீரோவாக நடித்திருக்கிறார். இதில் பல வெற்றிப் படங்களும் தந்திருக்கிறார்.
சமீபத்தில் சந்தானம் நடிப்பில் டிடி நெக்ஸ்ட் லெவல் படம் வெளியானது. ஆனால் பெரிய அளவுக்கு இந்த படம் வரவேற்பை பெறவில்லை. இந்த படத்தை நடிகர் ஆர்யா தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் தி ஷோ பீப்பிள் என்ற நிறுவனம் மூலம் தயாரித்திருந்தார். மேலும் அனந்தன் காடு என்ற படத்தில் ஆர்யா நடித்து வருகிறார்.
நடிகர் ஆர்யாவும் சந்தானமும் நெருங்கிய நண்பர்களாக இருக்கின்றனர். பாஸ் என்கிற பாஸ்கரன் சரவணனும் வாசுவும் ஒண்ணா படிச்சவங்க ராஜா ராணி சேட்டை உள்ளிட்ட படங்களில் இருவரும் இணைந்து நடித்திருக்கின்றனர். அடுத்ததாக பாஸ் என்கிற பாஸ்கரன் 2ம் பாகத்தில் ஆர்யா, சந்தானம் இணைந்து நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய போது நடிகர் சந்தானம் கூறியதாவது, பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் நான் நடித்த போது, ஆர்யாவிடம் பேசிக்கொண்டிருந்தேன். அப்போது என் உடல் எடையை குறைக்க இளைக்க வேண்டும் என்று ஏதேச்சையாக பேச்சுவாக்கில் சொன்னேன்.
அப்புறம் அடுத்த நாள் வா மச்சி, டீ சாப்பிட போலாம் என்று ஆர்யா என்று என்னை ஆர்யா கூட்டீட்டு போனார். டீ சாப்பிட்டா வெயிட் குறைஞ்சிடுமா என கேட்டுக்கொண்டே போனேன். அங்க போனா சைக்கிள் இருந்தது. கார்ல போலாம் மச்சான் என்றேன். இல்லே மச்சா, சைக்கிளில் போலாம் என்று என்னை கூப்பிட்டார். நானும் சைக்கிளை ஓட்டிக்கொண்டு போனேன்.
அப்படியே இங்கிருந்து மகாலிபலிபுரம் வரைக்கும் சைக்கிளிலேயே கூட்டீட்டு போயிட்டார். எனக்கு வெறுத்துப் போச்சு. உடம்பெல்லாம் வேர்த்து ஊத்துது. அங்கே போனா ஒரு டீயை மட்டும் வாங்கி கொடுத்தார். அதுவும் சாதாரண டீ தான். என்ன இது டீ ன்னு கேட்டதுக்கு சும்மா அது நார்மல் டீ தான். அதை தான் சைக்கிளில் வந்து குடிச்சுட்டு போகணும் என்றார். அப்புறம் என்னால் ரிடர்ன் சைக்கிளில் வர முடியலே. தொடை எல்லாம் அரிச்சிடுச்சு. கால் எல்லாம் வீங்கி வலி ஆயிடுச்சு. காரை வரவெச்சு அப்புறம் கார்ல தான் திரும்பி வந்தேன் என்று நடிகர் சந்தானம் கூறியிருக்கிறார்.





