- Advertisement -
Homeபொழுதுபோக்குராமோஜி பிலிம் சிட்டி குறித்து அவதூறாக பேசிய தனுஷ் பட நடிகை - சர்ச்சை கிளம்பியதால்...

ராமோஜி பிலிம் சிட்டி குறித்து அவதூறாக பேசிய தனுஷ் பட நடிகை – சர்ச்சை கிளம்பியதால் இப்போ இப்படி ஒரு விளக்கம் தந்திருக்கிறாரே…?

- Advertisement -

பாலிவுட் சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகையாக இருப்பவர் கஜோல். இந்தியில் ஷாருக்கான் சல்மான்கான் அமீர்கான் என முன்னணி நட்சத்திர ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்த நாயகி. இந்தியில் முன்னணி நடிகர் அஜய் தேவ்கனை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். 50 வயதிலும் இன்னும் சிறப்பான கேரக்டர்களில் கஜோல் நடித்து வருகிறார்.

தமிழில் மின்சார கனவு படத்திலும் விஐபி 2 படத்திலும் கஜோல் நடித்திருக்கிறார். அதனால் தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் இவர் பரிச்சயமானவர்தான். 1997ம் ஆண்டில் வெளியான மின்சார கனவு படத்தில் பிரபுதேவாவுக்கு ஜோடியாகவும், 20 ஆண்டுகள் கழித்து 2017ம் ஆண்டில் வெளியான தனுஷ் நடித்த வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் தொழிலதிபராகவும் கஜோல் நடித்திருந்தார்.

- Advertisement -

இந்நிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் நடிகை கஜோல், ஐதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டி குறித்து கூறுகையில், அது பேய்கள் இருக்கும் இடம், ரொம்பவும் பயங்கரமானது என்று கூறியிருந்தார். ஏராளமான தமிழ் தெலுங்கு இந்தி மலையாளம் கன்னடம் என பல மொழி படங்கள் ஷூட்டிங் நடக்கும் இடம் ஐதராபாத் ராமோஜி பிலிம் சிட்டி.

தினமும் பொதுமக்கள் அதிகளவில் வந்து செல்லும் இடமாகவும் ராமோஜி பிலிம் சிட்டி உள்ளது. பாகுபலி உள்ளிட்ட பல வெற்றிப் படங்கள் உருவானது இந்த பிலிம் சிட்டியில்தான். தமிழில் இந்தியில் முன்னணி ஹீரோக்கள் நடிக்கும் பல படங்கள் ஷூட்டிங் நடத்தப்படுவது ராமோஜி பிலிம் சிட்டியில்தான். அப்படிப்பட்ட புகழ்வாய்ந்த இடத்தை பேய்க்கும் இருக்கும் என நடிகை கஜோல் கூறியது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

- Advertisement -

இந்நிலையில், தான் பேசியது குறித்து விளக்கம் தந்துள்ள நடிகை கஜோல் தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது, நான் ராமோஜி பிலிம் சிட்டி பற்றி அப்படி கூறியது என்னுடைய மா படத்தின் பிரமோஷனுக்கான அர்த்தத்தில் தான். மற்றபடி தவறான நோக்கத்தில் அப்படி நான் கூற முயற்சிக்கவில்லை. நான் அங்கு பல புராஜெக்ட்களில் நடித்து இருக்கிறேன்.

இத்தனை வருடங்களில் பலமுறை நான் ராமோஜி பிலிம் சிட்டியில் தங்கி இருக்கிறேன். படம் எடுக்க அது மிகவும் புரபஷனல் நிலை அங்கே இருக்கும். சுற்றுலா பயணிகளும் அங்கே ஏராளமாக வருவதை பார்த்திருக்கிறேன். குடும்பங்கள் மற்றும் குழந்தைகளுக்கு அது ஒரு பாதுகாப்பான சிறந்த இடம்தான் என்று நடிகை கஜோல் அந்த பதிவில் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்