தமிழ் சினிமாவில் கடந்த 1990களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ரோஜா. 8 ஆண்டுகளில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர். இயக்குனர் ஆர்கே செல்வமணியை காதல் திருமணம் செய்த அவருக்கு மகன் மகள் உள்ளனர். ஆந்திராவில் அரசியல் களத்தில் இருந்த அவர் ஆட்சி மாற்றம் காரணமாக மீண்டும் தமிழ் சினிமாவில் நடிக்க வந்துவிட்டார்.
இந்நிலையில் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகை ரோஜா கூறியதாவது, நான் நடிக்க முடியாமல் மறுத்த படங்கள் நிறைய இருக்கின்றன. நான் பிஸியான நடிகையாக இருந்த போது எனக்கு ஒரு விபத்து ஏற்பட்டு விட்டது. அதிரடி படை படத்தில் சண்டை காட்சியில் நடித்த போது ஷூட்டிங் ஸ்பாட்டில் காலில் பலத்த அடிபட்டு விட்டது.
அதனால் நான் அட்வான்ஸ் வாங்கிவிட்டு பிறகு காலில் அடிபட்டதால் அந்த படங்களில் நடிக்க முடியாமல் பணத்தை திருப்பிக் கொடுத்த தெலுங்கு மற்றும் தமிழ் படங்கள் நிறைய இருக்கிறது. அந்த மாதிரி நான் மிஸ் செய்த சூப்பர் ஹிட் படங்கள் நிறைய இருக்கிறது. அதை எல்லாம் பார்க்கும் போது எனக்கு ரொம்ப வருத்தமாக கஷ்டமாக இருக்கும்.
அதெல்லாம் நான் நடிக்க வேண்டிய படங்கள். ஆனால் இப்போது அதை சொன்னால் யாரும் நம்ப மாட்டாங்க இல்லே. எனக்கு ஆக்சிடென்ட் ஆகி நான் 4 மாதங்கள் பெட் ரெஸ்ட்டில் இருந்தேன். செல்வா டைரக்ஷனில் அதிரடிப்படை பண்ணும்போது பைட் சீன்ல மேலே உயரத்துல இருந்து கீழே விழுந்துட்டேன். அப்போ நான் ரொம்ப பயங்கர பிஸி. நிறைய படங்களில் நடிச்சிட்டு இருந்தேன்.
காலில் அடிபட்டு அப்போ ஆபரேசன் பண்ணியிருந்தாங்க. அதனால் 4 மாதங்கள் பெட் ரெஸ்ட்டுல இருந்தேன். டாப்ல இருந்த என்னால் பிஸியான ஹீரோக்களுடன் என்னால் படம் உடனே பண்ண முடியலே.அந்த நேரத்துல எனக்கு பின்னாடி வந்தவங்க எல்லாம் நிறைய படங்களில் நடிச்சு என் லெவலுக்கு போட்டியா வந்துட்டாங்க. எனக்கு கஷ்டமா இருந்துச்சு. நான் பின்னாடி போயிட்டேன்.
அப்போ என்ன கடவுள் இது? கொடுக்கற மாதிரி கொடுத்துட்டு திரும்ப எடுத்துட்டாரே என்று வருத்தப்பட்டேன். இது ஏன் எதுனால என்று ரொம்பவும் ஃபீல் செஞ்சேன். அப்புறம் மறுபடியும் ஹார்ட் ஒர்க் பண்ணி எக்சர்சைஸ் எல்லாம் பண்ணி பைட் டான்ஸ் என்று மறுபடியும் பழைய பொசிசனுக்கு நான் வந்துட்டேன். மறுபடியும் நான் சினிமாவில் சக்சஸ் ஆயிட்டேன். அந்த வில் பவர் முதலில் இருந்தே என்கிட்ட இருக்கு. நான் நெனைச்சேன்னா ஜெயிக்கணும்னா ஜெயிக்கிற வரைக்கும் விட மாட்டேன். அது அரசியலிலும் சரி சினிமாவிலும் சரி என்று நடிகை ரோஜா ஓபனாக கூறியிருக்கிறார்.





