பாலிவுட் சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகையாக வலம் வருபவர் ஜான்வி கபூர். இவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 1970 80களில் தமிழில் 16 வயதினிலே மூன்று முடிச்சு சிகப்பு ரோஜாக்கள் அடுத்த வாரிசு மீண்டும் கோகிலா உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகை ஸ்ரீதேவி.
பிறகு தமிழில் இருந்து இந்திக்கு சென்ற அவர் நடிகர் அனில் கபூரின் அண்ணன் போனி கபூரை திருமணம் செய்துக்கொண்டார். இந்த தம்பதிக்கு ஜான்வி கபூர் குஷி கபூர் என்ற 2 மகள்கள் உள்ளனர். இதில் ஜான்வி கபூர் இந்தி படங்களில் நடித்து வருகிறார். தற்போது தென்னிந்திய சினிமாவிலும் ஜான்வி கபூர் தீவிரமாக கவனம் செலுத்தி நடித்து வருகிறார்.
சமீபத்தில் தனது சகோதரி குஷி கபூருடன் சேர்ந்து கரண் ஜோஹர் வழங்கும் பிரபல காஃபி வித் கரண் என்ற நிகழ்ச்சியில் நடிகை ஜான்வி கபூர் கலந்துக் கொண்டார். அந்த நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட பல சுவாரசியமான மற்றும் தனிப்பட்ட கேள்விகளுக்கு ஜான்வி கபூர் வெளிப்படையாக பதிலளித்தார். நிகழ்ச்சியின் ரேபிட் பயர் சுற்றின் போது, கரண் ஜோஹர், ஒரு வில்லங்கமான கேள்வியை கேட்டார்.
உங்களுக்கு இதுவரை வந்த குறுஞ்செய்திகளில் மிகவும் ஃபிளர்ட்டியான மெசேஜ் எது என்று கேட்டார். இதற்கு பதில் அளிப்பதற்கு முன், தன் சகோதரியை பார்த்து, நான் இதை சொன்னால் நீ என் மீது கோபப்படுவாய் என்று சொல்லி ஜான்வி கபூர் சிரித்தார். பின்னர் கரண் ஜோஹரிடம், பிரபல பாலிவுட் நடிகர் ஒருவர் தனக்கு அனுப்பிய மெசேஜை பற்றி வெளிப்படையாக ஜான்வி கபூர் கூறினார்.
உன் உடலில் இருக்கும் எல்லா மச்சங்களையும் நான் பார்க்கலாமா? என்று அந்த நடிகர் தனக்கு மெசேஜ் அனுப்பியதாக ஜான்வி கபூர் கூறினார். அவரது பதிலைக் கேட்டு அதிர்ச்சியடைந்த கரண் ஜோஹர், அப்படியா? உனக்கு அவ்வளவு மச்சங்களாஇருக்கின்றன? என வேடிக்கையாக கேட்டார்.
அதற்கு ஜான்வி கபூர், ஆமாம் எனக்கு நிறையவே இருக்கின்றன என்று வெட்கத்துடன் சிரித்தபடி பதிலளித்தார்.
அவர்களின் இந்த கலகலப்பான உரையாடல் அங்கிருந்து அனைவரையும் கலகலப்பாக்கியது. இருப்பினும் அந்த மெசேஜை அனுப்பிய பாலிவுட் நடிகர் யார் என்பதை ஜான்வி கபூர் வெளியில் சொல்லவில்லை. அப்படி ஒரு அந்தரங்கமான மெசேஜ் அனுப்பிய அந்த பிரபல இந்தி நடிகர் யாராக இருக்கும் என்று சோசியல் மீடியாவில் ரசிகர்கள் தீவிரமாக விவாதித்து யார் அவர் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.





