- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் தனுஷூடன் நடிக்க மாட்டேன் என்று கண்டிப்பாக சொல்லிட்டேன் - நடிகர் கருணாஸ் ஓபன்டாக்!

நடிகர் தனுஷூடன் நடிக்க மாட்டேன் என்று கண்டிப்பாக சொல்லிட்டேன் – நடிகர் கருணாஸ் ஓபன்டாக்!

- Advertisement -

ஆரம்பத்தில் இசை கச்சேரிகளில் மேடைகளில் கானா பாடல்களை தனது மனைவி கிரேஸியுடன் இணைந்து பாடிக்கொண்டு இருந்தவர் கருணாஸ். பிறகு இயக்குனர் பாலா அவரை தனது நந்தா படத்தில் லொடுக்குப்பாண்டி என்ற கேரக்டரில் அறிமுகம் செய்து வைத்தார். திருடன் கேரக்டரில் அந்த படத்தில் கருணாஸ் நடிப்பு வேற லெவலில் இருந்தது.

அவரது வசன உச்சரிப்பும் உடல் மொழியும் நடிப்பும் லொடுக்குப்பாண்டி என்ற கேரக்டரில் கருணாஸ் வாழ்ந்து காட்டியிருந்தார். தொடர்ந்து பல படங்களில் ரஜினி கமல் விஜய் அஜீத்குமார் தனுஷ் சூர்யா என பலருடன் சேர்ந்து காமெடி ரோல்களில் நடித்து பிரபல நடிகராக மாறினார். மேலும் திண்டுக்கல் சாரதி அம்பாசமுத்திரம் அம்பானி போன்ற படங்களில் நாயகனாக நடித்தார்.

- Advertisement -

நடிகர் தனுஷ் நடிகை நயன்தாரா இணைந்து நடித்த படம் யாரடி நீ மோகினி. இந்த படத்தில் நடிகர் தனுஷின் நண்பராக கருணாஸ் நடித்திருப்பார். அதுவும் போலீஸாக இருப்பார். தனுஷ் குறித்து நயன்தாராவிடம் கருணாஸ் போனில் பேசும் காட்சி செம காமெடியாக பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.

சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் கருணாஸ் கூறியதாவது, யாரடி நீ மோகனி படத்தில் முதன்முதலா என்கிட்ட சொன்னப்போ நான் அந்த படத்துல நடிக்க மாட்டேன்னு சொல்லிட்டேன். எனக்கு டெலிபோன் பூத்ல பேசற ஒரே ஒரு சீன்தான் இருந்தது. டைரக்டர் கிட்ட கூப்பிட்டு இல்லேண்ணா நான் பண்ணலேன்னு சொல்லிட்டேன்.

- Advertisement -

அந்த பப்ளிக் டெலிபோனில் நயன்தாராவுக்கு நான் போன் செய்து பேசும் காட்சி. அந்த ஒரு சீனுக்காக படத்தில் தனுஷூடன் அந்த காட்சியில் நடிக்க மாட்டேன் என்று ஆரம்பத்தில் சொல்லி விட்டேன். அப்புறம்தான் யோசிச்சேன். ஒரு சீன்தான் இருக்கு. பக்கத்துல தனுஷ் இருக்கார். அந்த சீன்ல நயன்தாரா இருக்காங்க.இந்த ஒரு சீன்ல நடிச்சு உன்னால தியேட்டர்ல கைதட்டல் வாங்க முடியாதான்னு யோசிச்சேன்.

தனுஷை தாண்டி நயன்தாராவை தாண்டி உன்னால கைதட்டல் வாங்க முடியாதா? அந்த சீன்ல பெர்பாமென்ஸ் பண்ற ஸ்கோப் இருக்கா இல்லையா? அப்படீன்னா என்னை நானே கேட்டுக்கிட்டு, நீ போய் நடின்னு என்னை நானே சொல்லி நடித்த படம்தான் யாரடி நீ மோகினி என்று நடிகர் கருணாஸ் அந்த நேர்காணலில் வெளிப்படையாக பேசியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்