- Advertisement -
Homeபொழுதுபோக்குஅட இது வேற லெவலா இருக்குதே…. திடீரென இணையத்தில் வைரலான நடிகர் கிங்காங்… திடீரென அவருக்கு...

அட இது வேற லெவலா இருக்குதே…. திடீரென இணையத்தில் வைரலான நடிகர் கிங்காங்… திடீரென அவருக்கு சர்ப்ரைஸ் தந்த இயக்குனர் டி ராஜேந்தர்!

- Advertisement -

கடந்த 1990ம் ஆண்டில் ரஜினிகாந்த் நடித்த அதிசயப்பிறவி படத்தில் ஒரு சிறிய காட்சியில் பிரபலமானவர் நடிகர் கிங்காங். இவரது இயற்பெயர் சங்கர். உயரம் குறைவான தோற்றம் கொண்ட இவர் தொடர்ந்து பல படங்களில் நடித்தார். குறிப்பாக நெத்தியடி ஊரை தெரிஞ்சுகிட்டேன் கிழக்குகரை சின்னபசங்க நாங்க என பல படங்களில் காமெடி ரோலில் நடித்திருக்கிறார்.

சினிமாவில் மட்டுமின்றி டிவி நாடகங்களிலும் மேடை நிகழ்ச்சிகளிலும் கிங்காங் பங்கேற்று வருகிறார். அத்துடன் அன்று முதல் இன்று வரை தமிழ் படங்களில் காமெடி காட்சிகளில் நடித்து வருகிறார். குறிப்பாக போக்கிரி சுறா கருப்பசாமி குத்தகைதாரர் என பல படங்களில் வடிவேலுவுடன் காமெடி செய்திருக்கிறார்.

- Advertisement -

தற்போது 53 வயதான நடிகர் கிங்காங் தனது மகளுக்கு சென்னையில் திருமணம் வைத்திருக்கிறார். வருகிற 10ம் தேதி கிங்காங் மகளுக்கு சென்னையில் திருமணம் நடைபெற உள்ளது. இதையொட்டி கடந்த சில வாரங்களாக நடிகர் கிங்காங் பிரபலங்களை சந்தித்து திருமண அழைப்பிதழ் கொடுத்து அவர்களை திருமணத்துக்கு வரவேற்கிறார்.

அந்த வகையில் கன்னட நடிகர் சிவராஜ்குமாரை குடும்பத்துடன் போய் நேரில் சந்தித்து திருமண அழைப்பிதழ் கொடுத்தார். பிறகு தமிழக முதல்வர் ஸ்டாலின் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நடிகர்கள் சிவகார்த்திகேயன் விஜய் சேதுபதி மற்றும் தென்னிந்திய நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷால் பொருளாளர் கார்த்தி ஆகியோரை சந்தித்து அழைப்பிதழ் தந்திருக்கிறார்.

- Advertisement -

அடுத்து தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நடிகர்கள் பிரபுதேவா சரத்குமார் கூல் சுரேஷ் இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர் சினிமா தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் என நடிகர் கிங்காங் தொடர்ந்து அழைப்பிதழ்களை தந்து வருகிறார்.

மேலும் இயக்குனர் மற்றும் நடிகர் டி ராஜேந்தரை சந்தித்த நடிகர் கிங்காங் திருமண அழைப்பிதழ் கொடுத்தார். அப்போது டி ராஜேந்தா், புதிய படம் ஒன்றை டைரக்ட் செய்கிறேன். அதில் உங்களுக்கு ஒரு கேரக்டர் தருகிறேன் என்று உறுதியளித்து சர்ப்ரைஸ் தந்தார். காமெடி நடிப்பில் ரசிகர்கள் மனம் கவர்ந்த நடிகர் கிங்காங், இப்படி தமிழக முதல்வர் ஸ்டாலின், எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி முன்னணி நட்சத்திர நடிகர்களை தனது மகள் திருமண விழாவுக்கு அழைத்திருப்பது இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்