தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் அஜீத் குமார். சினிமாவில் நடிப்பதில் அஜீத்குமாருக்கு எவ்வளவு ஈடுபாடு ஆர்வம் இருக்கிறதோ அதைப்போலவே நடிகர் அஜீத்குமாருக்கு கார் ரேஸ், பைக் ரேஸ் துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட சில விளையாட்டுகளில் மிகுந்த ஈடுபாட்டுடன் இருந்து வருகிறார்.
கடந்த 6 மாதங்களாக பல்வேறு நாடுகளில் நடந்து வரும் கார் ரேஸ் பந்தயங்களில் நடிகர் அஜீத்குமார் கலந்து கொண்டிருக்கிறார். துபாய் பெல்ஜியம் இத்தாலி பிரிட்டன் உள்ளிட்ட பல நாடுகளில் தொடர்ந்து நடந்து வரும் கார் ரேஸ் போட்டிகளில் நடிகர் அஜீத்குமார் பங்கேற்று வருகிறார்.
அஜீத்குமார் கார் ரேஸிங் என்ற அணியின் தலைவராக இருந்து தனது உறுப்பினர்களுடன் அவர் கார் ரேஸில் தொடர்ந்து பங்கேற்று வருகிறார். பெல்ஜியம் நாட்டில் கடந்த வாரம் நடந்த கிரவுட் ஸ்டிரைக் ஸ்பா ஜிடி 3 சாம்பியன்ஷிப் போட்டியில் ப்ரோ ஏஎம் பிரிவில் அஜீத்குமார் கார் ரேஸ் அணி முதல் இடத்தை பெற்றது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே துபாயில் நடந்த ரேஸ்சில் அஜீத்குமாரின் கார் ரேசிங் அணி 3வது இடம் பிடித்து சாதனை படைத்தது. இத்தாலி மற்றும் பெல்ஜியம் நாடுகளில் நடந்த கார் ரேஸ் போட்டிகளிலும் அதிக பரிசுகளை அஜீத்குமார் கார் ரேஸிங் அணி வென்றுள்ளது. தொடர்ச்சியாக கார் ரேசிங்கில் நடிகர் அஜீத்குமார் மற்றும் அவரது அணி தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது.
இந்நிலையில் பாஸ் அண்ட் பியூரியஸ் எப்1 போன்ற கார் ரேஸ் தொடர்பான புகழ்பெற்ற ஹாலிவுட் படங்களில் நடிக்க அழைப்பு வந்தால் நிச்சயம் போவேன் என்று நடிகர் அஜீத்குமார் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய போது வெளிப்படையாக கூறியிருக்கிறார். தற்போது பிரான்சில் நடந்து வரும் கார் ரேஸில் பங்கேற்று உள்ள நடிகர் அஜித்குமார் இது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு நடிகர் அஜீத்குமார் கூறுகையில், பாஸ்ட் அண்ட் பியூரியஸ் எப்1 போன்ற படங்களில் அழைப்பு வந்தால் நிச்சயம் நடிப்பேன். எனக்கு ஆதரவளித்து வரும் ரசிகர்களுக்கு மிக்க நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் அஜீத்குமார் கூறியிருக்கிறார். ஏற்கனவே நடிகர் அஜீத்குமார் துபாயில் சொந்தமாக வீடு வாங்கி செட்டில் ஆகிவிட்டார். மேலும் தமிழ் சினிமாவில் நடிப்பதையும் வெகுவாக குறைத்துக் கொண்டிருக்கிறார். இப்போது ஹாலிவுட் படங்களில் நடிக்க விருப்பம் என்று கூறியிருப்பதால், போற போக்கை பார்த்தால் தமிழ் சினிமாவையே மறந்து விடுவாரா என்று ரசிகர்கள் கவலைப்படுகின்றனர்.





