நடிகை நயன்தாராவுக்கு தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டப் பெயர் உண்டு. ஏனெனில் முதலில் ஹீரோக்களுக்கு ஊறுகாய் போல தொட்டுக்கொள்ளவும், பாடல் காட்சிகளில் நடிக்கவும்தான் ஹீரோயின்கள் தேவைப்பட்டனர். பல படங்களில் ஹீரோவின் சம்பளம் பல கோடிகளில் இருக்கும். ஹீரோயின்களில் சம்பளம் சில லட்சங்களில் இருக்கும்.
ஆனால் சரத்குமாருக்கு நாயகியாக ஐயா படத்தில் தமிழ் சினிமாவில் அறிமுகமான நயன்தாரா, துவக்கத்தில் சாதாரண ஹீரோயினாக தான் பல படங்களில் நடித்தார். ஒரு கட்டத்தில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கேரக்டரில் நடிக்கத் துவங்கினார். கோபி நயினார் இயக்கிய அறம் போன்ற படங்கள் அவருக்கு மிகப்பெரிய அந்தஸ்தை பெற்றுத் தந்தது.
அதன்பிறகு லேடி சூப்பர் ஸ்டார் பட்டம் பெற்ற நயன்தாரா, இதுவரை 75 படங்களில் நடித்து முடித்திருக்கிறார். சமீபத்தில் இவரது 75வது படமாக வெளியான படம் அன்னபூரணி. அக்ரஹாரத்து மாமியான இவர், சமையல் போட்டியில் ஜெயிக்க, அசைவம் சமைப்பதுதான் படத்தின் கதை. இதில் தேவையில்லாத சில சர்ச்சையான வசனங்களை பேசி, படம் ஏகப்பட்ட பிரச்னையை உண்டு பண்ணியது.
இந்நிலையில் தற்போது மண்ணாங்கட்டி என்ற படத்தில் நயன்தாரா நடித்து வருகிறார். கொடைக்கானலுக்கு அருகில் ஒரு மலைகிராமத்தில் இந்த படத்தின் ஷூட்டிங் என்ற நிலையில், அவ்வளவு தூரம் எல்லாம் வர முடியாது. அந்த ஷெட்டை சென்னையில் போடுங்கள். இங்கு வந்து நடித்து தருகிறேன், என ரூ. 10 கோடி சம்பளம் வாங்கிவிட்டு சொல்லி இருக்கிறார் நயன்தாரா.
அதையும் ஏற்றுக்கொண்டு, சென்னையில் வளசரவாக்கம் பகுதியில் பல கோடி செலவில் அதே போல் மலைகிராமம் செட் அமைத்து, படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதில் நயன்தாராவும் பங்கேற்று நடித்து வருகிறார். இந்த படப்பிடிப்புக்கு வரும்போது நயன்தாரா தனது குழந்தைகள் இருவரையும் அழைத்துக்கொண்டு வந்து விடுகிறார்.
உயிர், உலகம் என பெயரிடப்பட்டுள்ள அந்த 2 குழந்தைகளை கவனித்துக்கொள்ளவும், நயன்தாராவுக்கு அசிஸ்டெண்டுகளாவும் மொத்தம் 5 பெண்கள் நயன்தாராவுடன் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்துவிடுகின்றனர். படப்பிடிப்பில் நயன்தாரா நடித்து முடிக்கும் வரை, அந்த குழந்தைகளை் 5 பெண்களும் பார்த்து கவனித்துக்கொள்கின்றனர். இதற்காக அவர்களுக்கு படத் தயாரிப்பாளர் தரப்பில் இருந்து தலா ரூ. 20 ஆயிரம் என சம்பளம் வழங்கப்படுகிறது. அதனால் எப்போது இந்த படப்பிடிப்பு முடியும் என தயாரிப்பாளர் நொந்து போய் இருக்கிறார்.





