- Advertisement -
Homeபொழுதுபோக்குஅறிவுரை சொல்லும் தகுதி அற்றவர் ராதிகா சரத்குமார் - தாய் கிழவி படம் குறித்து விளாசித்...

அறிவுரை சொல்லும் தகுதி அற்றவர் ராதிகா சரத்குமார் – தாய் கிழவி படம் குறித்து விளாசித் தள்ளிய பிரபல நடிகர்!

- Advertisement -

அறிமுக இயக்குனர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் உருவான படம் தாய்க்கிழவி. கடந்த 27ம் தேதி தியேட்டர்களில் வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களுடன் இந்த படம் ஓடிக் கொண்டிருக்கிறது. தாய்கிழவி படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தனது எஸ்கே புரடெக்சன் சார்பில் சொந்தமாக தயாரித்திருக்கிறார். இந்த படத்தில் பவுனுத்தாய் என்ற கேரக்டரில் ராதிகா சரத்குமார் காதில் தண்டட்டி அணிந்த வயதான மூதாட்டி கேரக்டரில் கெத்தாக நடித்திருக்கிறார்.

மேலும் அவரது மகன்கள் கேரக்டரில் அருள்தாஸ் சிங்கம்புலி பால சரவணன் உள்ளிட்டோர் சிறப்பான நடிப்பை தந்திருக்கின்றனர். இந்த படம் குறித்து பலரும் நேர்மறையான விமர்சனங்களை தந்து வரும் நிலையில் பிரபல நடிகர் மற்றும் பத்திரிகையாளர் பயில்வான் தங்கநாதன் இந்த படம் குறித்து தனது விமர்சனத்தை முன்வைத்திருக்கிறார்.

- Advertisement -

நடிகர் பயில்வான் ரங்கநாதன் ஒரு வீடியோவில் கூறியதாவது, ராதிகா சரத்குமார் இந்த படத்தில் தாய்க் கிழவியாக பவுனுத்தாய் என்ற கேரக்டரில் நடித்திருக்கிறார். 75 வயது கிழவியான இவர் வட்டிக்கு பணம் கொடுத்து சம்பாதித்து வருகிறார். சுருட்டு பிடிப்பது சேட்டைகள் செய்வது என ஒரு ஜாலியான கிழவியாக இருக்கிறார். ஆனால் திடீரென மரண படுக்கையில் தாய்கிழவி விழுந்து விடுவதால் அவரது 3 மகன்களும் கிழவி எப்போது சாகும் என்ற எண்ணத்தில் இருக்கின்றனர்.

அப்போது தான் நகை வியாபாரி இளவரசு மூலமாக பவுனுத்தாய் 160 சவரன் தங்க நகை வாங்கி சேர்த்து வைத்திருக்கும் விஷயம் தெரிய வருகிறது. அதனால் கோமாவில் படுக்கையில் உள்ள பவுனுத்தாயிடம் கேட்க முடியாததால் நகையை கண்டுபிடிக்க மகன்களும் மகள்களும் கடனை வாங்கி பவுனுத்தாயை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து அவரை காப்பாற்றுகின்றனர். மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு திரும்பி வந்த பவுனுத்தாயி நகை இடத்தை சொன்னாரா? நகையை யாருக்கு கொடுத்தார் என்பதுதான் இந்த தாய்க்கிழவி படத்தின் மீதி கதை.

- Advertisement -

கதை ஆரம்பிக்கும்போதே கிளைமாக்ஸ் காட்சி வரை ராதிகா சரத்குமார் பவுனுதாயாக அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். அவர் நடந்து வருவது, பாவனை செய்வது என அனைத்தும் ரசிக்கும்படி உள்ளது. ஆனால் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் கணவனால் நிராகரிக்கப்பட்ட மகளுக்கு மறுமணம் செய்து வைத்துவிட்டு தனது 3 மகன்களுக்கும் அறிவுரை கூறுகிறார். அதாவது பெண்கள் எப்போதும் கணவனை நம்பி இருக்கக் கூடாது. சுயமாக சம்பாதித்து வாழ்க்கையை நடத்த வேண்டும் என்று அறிவுரை கூறுகிறார்.

இந்த அறிவுரையை கூறுவதற்கு ராதிகா சரத்குமார் தகுதியானவரா? அதாவது தாய்க்கிழவி படத்தில் நடித்த பவுனுத்தாயி தகுதியானவரா என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஏனென்றால் தாய்கிழவி தனது 3 மகன்களையும் ஊதாரி மகன்களாக வளர்த்திருக்கிறார். அதேபோல படத்தில் பல இடங்களில் ஆபாசமாக பேசுகிறார். கணவனையும் மகன்களையும் தரக்குறைவான வார்த்தைகளால் பேசுகிறார். ஒரு மோசமான தாய்கிழவியாக இந்த படத்தில் ராதிகா நடிப்பில் அசத்தியிருக்கிறார். அதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் அறிவுரை சொல்வதற்கு தகுதி இல்லாதவர் இந்த தாய்க்கிழவி என்று பயில்வான் ரங்கநாதன் தனது விமர்சனத்தில் கூறியிருக்கிறார்

- Advertisement -

சற்று முன்