- Advertisement -
Homeபொழுதுபோக்குஎன்னுடய பெரிய அண்ணன் சித்திக்.. கலங்கியபடி இரங்கல் தெரிவித்த மோகன் லால்

என்னுடய பெரிய அண்ணன் சித்திக்.. கலங்கியபடி இரங்கல் தெரிவித்த மோகன் லால்

- Advertisement -

மலையாளத்தில் ஃபேமஸ் இயக்குநராக இருந்தவர் சித்திக். லாலுடன் இணைந்து பல படங்களை இயக்கி வெற்றி படங்களாக கொடுத்தவர். அதன் காரணமாக சித்திக் – லால் இரட்டையர் தவிர்க்க முடியாதவர்களாக கேரளாவில் உருவெடுத்தனர். அதனைத் தொடர்ந்து மம்மூட்டியை வைத்து ஹிட்லர் என்ற படத்தை தனியாக இயக்கினார் சித்திக். 1996ஆம் ஆண்டு வெளியான அந்தப் படம் வெற்றிப் படமாக மாறியது.

தொடர்ந்து தனியாகவே படங்களை இயக்கிய சித்திக்கிற்கு மெகா ஹிட் படமாக அமைந்தது ப்ரெண்ட்ஸ். ஜெயராம் உள்ளிட்டோரை வைத்து அவர் இயக்கியிருந்த அந்தப் படம் 2001ஆம் ஆண்டு விஜய், சூர்யா, வடிவேலு, ரமேஷ் கண்ணா உள்ளிட்டோரை வைத்து தமிழில் ரீமேக் செய்தார். படம் மெகா ஹிட்டானது. குறிப்பாக வடிவேலு ஏற்றிருந்த நேசமணி கதாபாத்திரம் இன்றுவரை ட்ரெண்டிங்கில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

ப்ரெண்ட்ஸ் படத்தின் வெற்றிக்கு பிறகு தமிழில் அவர் எங்கள் அண்ணா, சாது மிரண்டால், காவலன், பாஸ்கர் ஒரு ராஸ்கல் ஆகிய படங்களை இயக்கினார். இவற்றில் சாது மிரண்டால் மற்றும் பாஸ்கர் ஒரு ராஸ்கல் படங்களை தவிர்த்து மற்ற இரண்டு படங்களும் மெகா ஹிட். குறிப்பாக எங்கள் அண்னாவில் வடிவேலுவின் காமெடியும், காவலலின் விஜய்யின் நடிப்பும் பெரிதும் பேசப்பட்டது. அதிலும் விஜய்க்கு காவலன் படம் ஒரு கம்பேக்காகவே அமைந்தது.

மலையாளத்தில் கடைசியாக அவர் மோகன் லாலை வைத்து பிக் பிரதர் படத்தை 2020ஆம் ஆண்டு இயக்கியிருந்தார். இந்தச் சூழலில் அவருக்கு நிமோனியா மற்றும் கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டது. அதிலிருந்து மீண்டுக்கொண்டிருந்த அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு ஒட்டுமொத்த மலையாளம் மற்றும் தமிழ் திரையுலகை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

சித்திக்கின் மறைவுக்கு மோகன் லால் கலங்கியபடி இரங்கல் தெரிவித்திருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் இரங்கல் பதிவில், “என் அன்புக்குரிய சித்திக்கின் மறைவை நம்ப முடியவில்லை. சித்திக் எனக்கு ஒரு பெரிய அண்ணன் இயற்கையான நகைச்சுவை, சாமானியர்களின் வாழ்க்கைச் சிக்கல்கள் என தன் கதைகளை வெளிப்படுத்தி உலகம் முழுவதும் உள்ள மலையாளிகளுக்குப் பிடித்தமானவராக மாறிய சித்திக், அகாலப் பிரிவின் சோகத்தை எளிதில் சொல்ல முடியாது.

அவரது வசீகரமான இயக்கத்தை பார்ப்பதற்கு ஒவ்வொரு படத்துக்காகவும் மில்லியன் கணக்கான பார்வையாளர்கள் காத்திருந்தனர். சித்திக் எங்களை மிகவும் சிரிக்க வைத்தார், நம்பிக்கையை இழக்காதீர்கள் என்பதை கூறினார், மென்மேலும் உயரத்தை அடைய முன்மாதிரியாக இருந்தார். யாரிடமும் பகைமை காட்டாமல், ஆடம்பரங்களைத் தவிர்த்து, பேச்சிலும், நடத்தையிலும் மென்மையாகவும், சாதாரண மனிதராகவும் வாழ்ந்தவர் சித்திக். அவரது கடைசிப் படமான பிக் பிரதர் முதல் அவர் உதவி இயக்குநராக பணியாற்றிய முதல் படமான நோக்கெத்த தூரத்து கண்ணும் நட்டு படத்தில் நடிக்கும் பாக்கியம் எனக்கு கிடைத்தது” என குறிப்பிட்டுள்ளார்.

சற்று முன்