- Advertisement -
Homeபொழுதுபோக்குகாமெடியே இல்லாம காமெடி படம் எடுத்து இருக்காங்க, இது படம்தானா? - தேசிங்கு ராஜா 2...

காமெடியே இல்லாம காமெடி படம் எடுத்து இருக்காங்க, இது படம்தானா? – தேசிங்கு ராஜா 2 படம் குறித்து விளாசித் தள்ளிய பிரபலம்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களை கொடுத்தவர் இயக்குனர் எழில். தீபாவளி ராஜா மனம்கொத்திப் பறவை தேசிங்கு ராஜா பூவெல்லாம் உன்வாசம் துள்ளாத மனமும் துள்ளும் வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் பெண்ணின் மனதை தொட்டு போன்ற பல நல்ல படங்களை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இயக்குனர் எழில் தந்திருக்கிறார்.

கடந்த 2013ம் ஆண்டில் நடிகர் விமல் நடிப்பில் வெளியான படம் தேசிங்கு ராஜா. அந்த படத்தை 12 ஆண்டுகள் கழித்து இப்போது தேசிங்கு ராஜா 2 என இயக்குனர் எழில் இயக்கி உள்ளார். இந்த 2ம் பாகம் படத்திலும் நாயகனாக விமல் நடித்திருக்கிறார். படத்துக்கு வித்யாசாகர் இசையமைத்துள்ளார். இந்த படத்துக்கு நெகடிவ் விமர்சனங்களை கிடைத்து வருகின்றன.

- Advertisement -

தேசிங்கு ராஜா 2 படம் குறித்து சினிமா விமர்சகர் ப்ளு சட்டை மாறன் வீடியோ ஒன்றில் கூறியிருப்பதாவது, இந்த படம் முழு நீள காமெடி படம். ஹீரோ போலீஸ் இன்ஸ்பெக்டராக வருகிறார் அதற்கு பக்கத்தில் இன்னொரு போலீஸ் இன்ஸ்பெக்டராக ஒரு அம்மாவை காட்டுகிறார்கள். அதுதான் புகழ். லேடீஸ் கெட்டப்பில் வரார். இவங்க ரெண்டு பேருக்கும் போட்டி இருக்கு அதுதான் கதை.

அப்புறம் ஹீரோயின் ஹீரோவை லவ் பண்ணி பிரேக் அப் ஆகுது. அவங்க ஹீரோ இருக்கிற ஆபிஸ்க்கு உயர் அதிகாரியாக வராங்க. அப்புறம் ஒரு ரவுடியோட தலையை வெட்டி தூக்கு சட்டியில் போட்டு அது கை மாறி போகுது அது ஒரு கதை. மந்திரியோட கண்டென்ட் வெளியே வந்தா அது கில்மா ஆயிடும் என்று அதை தேடி கண்டுபிடிக்க மந்திரி அலையுறாரு. இதுதான் இந்த படத்தோட கதை.

- Advertisement -

நல்லா யோசிச்சு பார்த்து ஒரு நாலு நல்ல சீன் சொல்லலாம் என்று பார்த்தால் இதைத்தான் கதை என்று சொல்ல முடியுது. படம் முழுக்க யோசித்து பார்த்தாலும் எங்காவது ஒரு காமெடி இருக்கான்னா இல்ல. இதோட காமெடி படம் என்று அவங்க எடுத்திருக்கிறனாலேயே ஆங்காங்க காமெடி ஆர்டிஸ்ட் போட்டு நிரப்பி வச்சிருக்காங்க. சரி படத்துல காமெடி இல்ல. கதையும் இல்லை. படமாவது படம் மாதிரி இருக்கான்னா அதுவும் இல்ல.

இந்த படம் ஒரு உப்புமா படம் மாதிரி தான் இருக்கு. அந்த அளவுக்கு எந்த ஒரு விஷயத்திலும் பர்பெக்சன் இல்லை. ஒரு பாட்டோ பைட்டோ டான்ஸ் எதுவும் குறிப்பிடும்படி இல்லை. இந்த வருஷம் வந்த படங்களில் ஒரு குறிப்பிடும் படியான விஷயமே இல்லாத குறிப்பிடும்படியான படம் இதுதான் என்று ப்ளு சட்டை மாறன் தேசிங்கு ராஜா 2 படம் குறித்து விமர்சித்து இருக்கிறார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்