தொட்டதெல்லாம் பொன்னாகும் என சில கைராசிக்காரர்களை சொல்வது போல, நடிகர் விஷால் எதை செய்தாலும் அது வம்பில்தான் மாட்டிவிடும் என்பது போல அவரது நிலமை மாறிக்கொண்டு வருகிறது. சில தினங்களுக்கு முன்புதான், விஷால் சாப்பிடும் போது செய்யும் வினோத வழிபாட்டை பார்த்து, யோகிபாபு செய்த பயங்கர ரியாக்சன், செம டிரண்டிங் ஆனது.
கடந்த சில ஆண்டுகளாகவே விஷால் படங்கள் எதுவும் சரியாக போகவில்லை. கடைசியாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய மார்க் ஆண்டனி படம்தான் விஷாலுக்கு கம்பேக் படமாக இருந்தது. ஆனால் உண்மையில் இந்த படத்தை வெற்றிக்கு அழைத்துச் சென்றது நடிப்பு அரக்கன் எஸ்ஜே சூர்யா என்பதை படம் பார்த்த யாருமே மறுக்க மாட்டார்கள்.
இந்த நிலையில், நியூயார்க்கில் இளம் பெண் ஒருவருடன் சுற்றித் திரிந்த விஷால், கேமராவை பார்த்தவுடன் முக்காடு போட்டுக்கொண்டு ஓடிய வீடியோ ஒன்று, சில வாரங்களுக்கு முன் வெளியாகி வைரலானது. கடைசியில் அது நாங்களே செய்த பிராங்க் வீடியோ, என விஷாலே ஒரு தன்னிலை விளக்கம் கொடுத்தார்.
அதே போல், கேப்டன் விஜயகாந்த் மறைவுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில், எந்தவிதமான இறுதி மரியாதையையும் செய்யவில்லை. இதிலும் சங்கத்தின் பொதுச்செயலாளராக விஷால் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். அந்த நேரத்தில் வெளிநாட்டில் இருந்துக்கொண்டு, வீடியோ ஒன்றை மட்டும் வெளியிட்டு தனது இரங்கலை தெரிவித்திருந்தார் விஷால்.
இந்த சூழலில் தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில், நேற்று முன்தினம் நடிகர், நடிகையர் பலர் கலந்துக்கொண்ட விஜயகாந்த் நினைவேந்தல் நிகழ்ச்சி நடந்தது. இதில் கமல்ஹாசன், சரத்குமார், ஆர்கே செல்வமணி போன்றோர் பங்கேற்றனர். இதில் பேசிய விஷால் பேசியதுதான் இப்போது டிரண்டிங் ஆகி வருகிறது.
சண்முகபாண்டியன் படத்தில் நானும் அவருடன் சேர்ந்து ஆசைப்படுகிறேன். நான் அவர் படத்தில் நடிக்க வேண்டும் என்றால், கண்டிப்பாக நடித்து தருகிறேன். இவர் பெரிய ஹீரோவாக வளர, நான் சண்முகபாண்டியன் படத்தில் நடிப்பதாக உத்தரவாதம் தருகிறேன் என்று விஷால் பேசினார். இவர் நடித்த படங்களே ஓடாத நிலையில், அந்தரத்தில் தொங்குகிறார். இவர் சண்முகபாண்டியனுடன் நடித்து அவரது வளர்ச்சிக்கு உதவப் போகிறாரா? எதுக்கு இத்தனை பில்டப்பு பண்றாரு என, சினிமா ரசிகர்கள் பலரும் சோஷியல் மீடியாவில் கலாய்த்து வருகின்றனர்.





