- Advertisement -
Homeபொழுதுபோக்குதமிழ் சினிமா பயணத்தில் 50ம் ஆண்டு பொன்விழாவை கொண்டாடும் நடிகர் ரஜினிகாந்த் - முக்கிய அறிவிப்பை...

தமிழ் சினிமா பயணத்தில் 50ம் ஆண்டு பொன்விழாவை கொண்டாடும் நடிகர் ரஜினிகாந்த் – முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அவரது மனைவி லதா ரஜினிகாந்த்!

- Advertisement -

நடிகர் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் நடிகராக பயணிக்க ஆரம்பித்து இப்போது 50 ஆண்டுகள் ஆகி விட்டது. கடந்த 1975ம் ஆண்டில் இயக்குனர் கே பாலசந்தர் இயக்கிய அபூர்வ ராகங்கள் படத்தில் ரஜினிகாந்த் அறிமுகமானார். சிவாஜி ராவ் என்ற அவரது பெயரை ரஜினிகாந்த் என மாற்றிய கே பாலசந்தர் தனது படத்தில் ரஜினியை அறிமுகப்படுத்தினார்.

இதுவரை ரஜினிகாந்த் நடிப்பில் தமிழ் இந்தி ஆங்கிலம் உள்பட 170 படங்கள் வெளியாகி உள்ளன. இதில் கடந்தாண்டில் வெளியான வேட்டையன் அவரது 170வது படமாகும். அடுத்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வரும் ஆகஸ்ட் 14ம் தேதி வெளியாக உள்ள படம் கூலி, ரஜினியின் 171 படமாகும். படப்பிடிப்பில் உள்ள ஜெயிலர் 2 அவரது 172வது படமாகும்.

- Advertisement -

நடிகர் ரஜினிகாந்துக்கு இப்போது 74 வயதாகிறது. 24 வயதில் நடிக்க வந்த அவர் 50 ஆண்டுகால சினிமா பயணத்தில் மக்கள் விரும்பும் ஒரு கலைஞனாக இன்னும் சினிமாவில் அதுவும் ஹீரோவாக நடித்துக்கொண்டு இருக்கிறார். இடையில் அரசியலுக்கு அவருக்கு பலவிதமான தரப்பில் இருந்தும் அழைப்பு வந்த நிலையில், அவர் அதை புறக்கணித்து விட்டார்.

ஆன்மிக வாழ்வில் அதிக நாட்டம் கொண்ட நடிகர் ரஜினிகாந்த், தொடர்ந்து சினிமாவில் நடிப்பதில் மட்டுமே தீவிர ஆர்வம் காட்டி வருகிறார். இதற்கிடையே வருகிற 27ம் தேதி கூலி படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு இண்டோர் ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. இதில் ரஜினிகாந்த் என்ன பேசப் போகிறார் என்பதில் ரசிகர்கள் ஆர்வமாக இருந்து வருகின்றனர்.

- Advertisement -

இந்த சூழலில் நேற்று நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, சூப்பர் ஸ்டாரின் 50வது ஆண்டு சினிமா கொண்டாட்டத்தை முன்னிட்டு அவர் படம் சம்பந்தப்பட்ட பழைய போஸ்டர்கள் கட்டுரைகள் சினிமா டிக்கெட்டுகள் சினிமா தொடர்பான பொருட்களை எனக்கு ரசிகர்கள் அனுப்பி வருகிறார்கள்.

அதை எல்லாம் பொக்கிஷம் போல பாதுகாத்து வருகிறேன். விரைவில் அதையெல்லாம் கொண்டு ஒரு கண்காட்சி அமைக்கப்படும். அவற்றை அனுப்பிய ரசிகர்களுக்கு நன்றி என லதா ரஜினிகாந்த் கூறியிருக்கிறார். அதனால் மிக விரைவில் ரஜினியின் கலை பொக்கிஷங்கள் என்ற பெயரில் ஒரு மாபெரும் கண்காட்சி நடத்த லதா ரஜினிகாந்த் திட்டமிட்டுள்ளார். விரைவில் அதுகுறித்த அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.

- Advertisement -

சற்று முன்