தனுஷ் தற்போது இந்திய திரைப்படங்களில் மட்டுமல்லாது ஹாலிவுட் நடிகராகவும் மிகப்பெரிய உச்சத்தை தொட்டிருக்கிறார். ஒரே வகையறா திரைப்படங்களில் நடிக்காமல் பல்வேறு வித்தியாசமான கதைக்களங்கள் கொண்ட திரைப்படங்களில் நடித்து வரும் தனுஷ், தற்போது “கேப்டன் மில்லர்” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படம் வருகிற தீபாவளி அன்று வெளிவரவுள்ளதால் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.

“கேப்டன் மில்லர்” திரைப்படத்தை தொடர்ந்து தனுஷ், தனது 50 ஆவது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இத்திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இத்திரைப்படத்தை தனுஷே இயக்கி நடிப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் “D 50” திரைப்படத்தை குறித்தான ஒரு முக்கிய தகவல் தற்போது வெளிவந்துள்ளது. அதாவது இத்திரைப்படத்தில் கதாநாயகியாக த்ரிஷா நடிக்கவுள்ளாராம். இவ்வாறு ஒரு தகவல் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

த்ரிஷா இதற்கு முன்பு தனுஷிற்கு ஜோடியாக “கொடி” திரைப்படத்தில் நடித்திருந்தார். அத்திரைப்படத்தில் தனுஷ் இரண்டு வேடத்தில் நடித்திருந்தார். அதில் அண்ணன் தனுஷ் அரசியல்வாதியாக இருக்கும் கட்சிக்கு எதிர்கட்சியில் த்ரிஷா இருப்பார். முதலில் இருவரும் காதலிப்பார்கள். ஆனால் அதன் பின் ஒரு கட்டத்தில் த்ரிஷா கட்சிக்காக தனுஷை கொலை செய்துவிடுவார். அதன் பின் தம்பி தனுஷ், தனது அண்ணனின் கொலைக்காக பழிவாங்குவார்.
இவ்வாறு த்ரிஷா, “கொடி” திரைப்படத்தில் வில்லி கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பார். இதனை தொடர்ந்து தற்போது தனுஷின் 50 ஆவது திரைப்படத்திலும் த்ரிஷா நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
த்ரிஷா தற்போது விஜய்யின் “லியோ” திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதனை தொடர்ந்து “விடாமுயற்சி” திரைப்படத்தில் த்ரிஷா அஜித்திற்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளிவருகின்றன.





