- Advertisement -
Homeபொழுதுபோக்குரஜினி 173 படத்தை இயக்கப் போவது மகாராஜா பட இயக்குனர் நித்திலன் சுவாமிநாதனா? - வெளியான...

ரஜினி 173 படத்தை இயக்கப் போவது மகாராஜா பட இயக்குனர் நித்திலன் சுவாமிநாதனா? – வெளியான முக்கிய தகவல்!

- Advertisement -

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்தாண்டில் வெளியான படம் வேட்டையன். இது அவரது 170வது படமாகும். இது கலவையான விமர்சனங்களை பெற்ற படமாக இருந்தாலும், படத்தை தயாரித்த லைகா புரடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனம் இதை வெற்றிப் படமாகவே கொண்டாடியது. இந்த படத்தில் நீண்ட காலத்துக்கு பின் இந்தி நடிகர் அமிதாப் பச்சன் ரஜினியுடன் இணைந்து நடித்திருந்தார்.

வேட்டையன் படத்தை அடுத்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், பல மாதங்களுக்கு முன்பே கூலி படத்தில் நடித்து முடித்து விட்டார். இது அவரது 171வது படமாகும். இந்த படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 14ம் தேதி திரைக்கு வர உள்ளது. பான் இந்தியா படமாக 5 மொழிகளில் இந்த படம் உலகம் முழுவதும் ரிலீஸ் செய்யப்படுகிறது.

கூலி படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் மிகப் பிரமாண்டமாக தயாரித்து இருக்கிறது. இந்த படத்தில் கன்னட நடிகர் உபேந்திரா தெலுங்கு நடிகர் நாகார்ஜூனா மலையாள நடிகர் சௌபிர் சாஹிர் இந்தி நடிகர் அமீர்கான் மற்றும் சத்யராஜ் ஸ்ருதிஹாசன் நித்யாராம் உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்திருக்கிறார்.

கூலி படத்தில் இருந்து சிக்குடு பாடலும் அதைத் தொடர்ந்து சமீபத்தில் மோனிகா பாடலும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று இருக்கிறது. அடுத்ததாக வருகிற ஆகஸ்ட் 2ம் தேதி கூலி படத்தின் டீசர் வெளியாகும் என்று படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அறிவித்திருக்கிறார். தற்போது நடிகர் ரஜினிகாந்த் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஜெயிலர் 2 படப்பிடிப்பில் நடித்துக் கொண்டிருக்கிறார். ரஜினி நடிக்கும் இந்த 172வது படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.

ஜெயிலர் 2 படத்தில் ரஜினியுடன் ரம்யா கிருஷ்ணன் மலையாள நடிகர் மோகன்லால் கன்னட நடிகர் சிவராஜ்குமார் தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்கள் நடித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் காமெடி கேரக்டரில் நடிகர் யோகி பாபு நடித்து வருகிறார்.
இதற்கிடையே சில தினங்களுக்கு முன்பு குரங்கு பொம்மை மகாராஜா ஆகிய படங்களின் இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன், நடிகர் ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். இதையடுத்து ரஜினிகாந்த் நடிக்க உள்ள அவரது 173வது படத்தை இயக்கப் போவது இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன்தான் என்ற தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஆனால் தமிழில் வெற்றிப் படங்களை தந்த இயக்குனர்களை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்து பேசுவது வழக்கம். அந்த வகையில் இது ஒரு சாதாரண சந்திப்புதான் என்றும், இந்த சந்திப்பில் நடிகர் ரஜினிகாந்த், நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் நடிக்கப் போவதாக எந்தவித முக்கிய தகவலும் இல்லை. அதுகுறித்த எந்த பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை என்றும் இப்போது தகவல் வெளியாகி உள்ளது. அதனால் ரஜினியின் 173வது படத்தின் இயக்குனர் யார் என்பதில் தொடர்ந்து சஸ்பென்ஸ் நீடிக்கிறது.

சற்று முன்