- Advertisement -
Homeபொழுதுபோக்குநயன்தாராவை தொடர்ந்து அந்த முன்னணி கதாநாயகியுடன் ஜோடி சேரும் கவின்... வளர்ச்சி நா அது இது...

நயன்தாராவை தொடர்ந்து அந்த முன்னணி கதாநாயகியுடன் ஜோடி சேரும் கவின்… வளர்ச்சி நா அது இது தான்யா… ஆச்சரியப்படும் ரசிகர்கள்…

- Advertisement -

கவின் நடிப்பில் கடைசியாக வெளிவந்த இரண்டு திரைப்படங்களும் கலவையான விமர்சனத்தை பெற்றன. இதில் ஒன்று இளன் இயக்கிய ஸ்டார் திரைப்படம். இதன் ட்ரெய்லர் வெளியாகும் போது படத்தின் மீது ஒரு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஆனால் அந்த எதிர்பார்ப்பை, ஸ்டார் திரைப்படம் பூர்த்தி செய்யவில்லை என்று தான் கூற வேண்டும். இருப்பினும் அது ஓரளவு வசூலை ஈட்டியது.

இதனைத் தொடர்ந்து கவினுக்கு பிளடி பெக்கர் திரைப்படம் வெளியானது. இயக்குனர் நெல்சன் இந்த திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானார். பெரும் எதிர்பார்ப்பில் வெளியான இந்த திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்று தோல்வியடைந்தது. விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் கவனத்தைப் பெற தவறியது.

- Advertisement -

இப்படியான சூழலில் கவின் தனது அடுத்தடுத்த திரைப்படங்களில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். இதில் நடன இயக்குனர் சதீஷ் முதல்முறையாக இயக்குனராக அறிமுகமாக இருக்கும் கிஸ் திரைப்படத்தில் கதாநாயகனாக வருகிறார் கவின். இதன் சூட்டிங் பணிகள் நிறைவடைந்து இருக்கும் நிலையில் படத்தை ரிலீஸ் செய்வதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.

இதுபோக கவின் பட்டியலில் மாஸ்க் திரைப்படமும் இருக்கிறது. வெற்றிமாறன் இந்த திரைப்படத்தை தயாரித்திருக்கிறார். ஆண்ட்ரியாவுக்கு மிக முக்கியமான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. திரில்லர் கதையாக மாஸ்க் திரைப்படம் எடுக்கப்பட்டிருப்பதாக கூறுகிறார்கள். அதிலும் சில பகுதிகளை வெற்றிமாறன் இயக்கி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

- Advertisement -

இது போக நயன்தாராவுடன் ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார் கவின். பாடலாசிரியர் விஷ்ணு எடவன் இதனை இயக்குகிறார். இதன் பணிகளும் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இப்படியான சூழலில் அண்மையில் கவினின் அடுத்த திரைப்படம் குறித்து அறிவிப்பு வெளியானது. ப்ரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கும் திரைப்படத்தை ராம் சங்கையா இயக்குவதாக கூறப்பட்டது.

இப்படி தொடர்ந்து பிஸியாக இருக்கும் கவின் அடுத்ததாக, இயக்குனர் கென் ராய்சனுடன் கைகோர்த்து இருக்கிறார். இதில் கதாநாயகியாக பிரியங்கா மோகன் நடிப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. ரொமான்டிக் காமெடி ஜானரில் இந்த திரைப்படம் எடுக்கப்பட இருக்கிறதாம். படத்தின் பூஜை நடைபெற்ற நிலையில் அது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்