- Advertisement -
Homeபொழுதுபோக்குகுபேரா திரைப்படத்தின் முதல் நாள் வசூல் இதுதான்... அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு... காலரை தூக்கிவிடும் தனுஷ்...

குபேரா திரைப்படத்தின் முதல் நாள் வசூல் இதுதான்… அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு… காலரை தூக்கிவிடும் தனுஷ் ரசிகர்கள்…

- Advertisement -

தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு ஹிந்தி ஏன் ஹாலிவுட் திரைப்படத்தில் கூட நடித்து தனது திறமையை நிரூபித்து வருகிறார் தனுஷ். தற்போது அவர் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் இந்தி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் அவருக்கு சங்கர் எனும் கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. விமானப்படை அதிகாரியாக தனுஷ் நடிப்பதாகவும் சொல்லப்படுகிறது.

இதுபோக தெலுங்கு மொழியிலும் அவர் கவனம் செலுத்தி வருகிறார். இதில் அவருக்கு முதல் திரைப்படமாக சார் அமைந்தது. தமிழில் இந்த திரைப்படம் வாத்தி எனும் பெயரில் வெளியானது. அண்மையில் வெளியான லக்கி பாஸ்கர் என்னும் வெற்றி திரைப்படத்தை கொடுத்த வெங்கி அட்லூரிதான் இந்த திரைப்படத்தை எடுத்திருந்தார். தமிழில் வாத்தி திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது.

- Advertisement -

இப்படியான சூழலில் அவர் இரண்டாவது முறையாக நேரடியாக தெலுங்கு திரைப்படத்தில் நடித்தார். சேகர் கமுலா இயக்கத்தில் குபேராவாக இந்த திரைப்படம் உருவாக, இது கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது. படத்தில் நாகர்ஜுனா மற்றும் ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் நிலையில், குபேரா ஓரளவு நல்ல விமர்சனத்தையே பெற்றிருக்கிறது.

இந்த திரைப்படத்தில் பிச்சைக்காரன் கதாபாத்திரத்தில் வாழ்ந்து இருக்கிறார் தனுஷ். ஒரு பெரும் தொகை அவரது பெயருக்கு பினாமியாக மாற்றப்பட, பிறகு என்ன நடந்தது என்பதைத்தான் இந்த திரைப்படத்தில் கூறி இருக்கிறார்கள். படம் முழுக்க முழுக்க தனுஷை மையப்படுத்தியே எடுக்கப்பட்டு இருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

- Advertisement -

தனது கதாபாத்திரத்தை சரியாக உணர்ந்து அதை மெருகூட்டி பலப்படுத்தி இருப்பதாக பலரும் தனுசை பாராட்டி வருகிறார்கள். அவரது ரசிகர்கள் நிச்சயம் தனுஷிற்கு மூன்றாவது தேசிய விருது கிடைக்கும் என்று சொல்கிறார்கள். படத்தில் நாகார்ஜூனாவுக்கும் ஓரளவு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பதாக சினிமா விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். முதல் பாதி நன்றாக இருந்ததாகவும், இரண்டாம் பாதி சுமாராக உள்ளது என்றும் பலர் கூறி வருகின்றனர்.

இப்படியான சூழலில் குபேரா திரைப்படம் ரிலீஸ் ஆன முதல் நாளில் மட்டும் 30 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மிக முக்கியமாக தமிழ் சினிமாவை விட தெலுங்கு சினிமாவிலேயே இந்த திரைப்படம் அதிக வசூல் செய்திருப்பதாக பேசி வருகிறார்கள். வரும் நாட்களிலும் இந்த திரைப்படம் அதிக வசூல் ஈட்டும் என்று சினிமா விநியோகஸ்தர்கள் சொல்லி வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்