இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், ஜாக்கி ஷெராப், மோகன் லால், சிவராஜ் குமார் போன்ற பல்வேறு நட்சத்திரங்களில் நடிப்பில் உருவாகியுள்ள படம் “ஜெயிலர்” திரைப்படமானது ஆகஸ்ட் 10-ஆம் தேதி நாளை திரைக்கு வரயிருக்கும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு தற்போது ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது.

ஏற்கனவே இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா மிகப் பிரமாண்டமான முறையில் நடைபெற்றதை அடுத்து இந்த படத்தின் ரிலீசுக்காக ரசிகர்கள் அனைவரும் காத்திருக்கின்றனர். இந்நிலையில் பல்வேறு நட்சத்திரங்கள் நடித்துள்ள இந்த படத்தில் சூப்பர் ஸ்டாரின் மனைவியாக நடித்துள்ள ரம்யா கிருஷ்ணன் எவ்வளவு சம்பளம் வாங்கியுள்ளார் என்பது குறித்த தகவல் வெளியாகி அனைவரது மத்தியில் கவனத்தைக் ஈர்த்துள்ளது.
இந்திய திரையுலகில் பல்வேறு மொழிகளில் பல படங்களில் நடித்துள்ள ரம்யா கிருஷ்ணன் தமிழ் திரையுலகில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக வெற்றிகரமான நடிகையாக வலம் வருகிறார். இந்நிலையில் கடந்த 24 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ரஜினியுடன் ஜோடி சேர்ந்துள்ள அவர் இந்த படத்தில் ரஜினியின் மனைவியாகவும் நடித்துள்ளார்.

இந்நிலையில் இந்த ஜெயிலர் திரைப்படத்திற்காக ரம்யா கிருஷ்ணன் வாங்கிய சம்பளம் ரூபாய் 80 லட்சம் வரை இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இவர்களுடன் பல்வேறு திரையுலகை சார்ந்த நட்சத்திரங்களும் ஒன்றாக நடித்துள்ளதால் இந்த படம் இந்தியா முழுவதும் மாபெரும் வெற்றி அடையும் என்று கூறப்படுகிறது.
ஏற்கனவே இந்தியா முழுவதும் பிரபலமாக இருக்கும் பல்வேறு நடிகர்கள் இந்த படத்தில் ஒன்றிணைத்துள்ளதால் நிச்சயம் இந்த படம் இந்தியா முழுவதும் பெரிய வெற்றியை பெறும் என்பதில் சந்தேகமில்லை. அதோடு கடைசியாக தோல்வியை சந்தித்த ரஜினி மற்றும் நெல்சன் ஆகியோருக்கு இந்த படமே ஒரு திருப்புமுனையை தரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.





