சூர்யா நடிப்பில் தற்போது ரெட்ரோ திரைப்படம் வெளியாகி உள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இந்த திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். 2டி என்டர்டைன்மென்ட் நிறுவனம் இதனை தயாரித்துள்ளது. பூஜா ஹெக்டே, ஜோஜூ ஜார்ஜ், விது, நாசர், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் இந்த திரைப்படத்தில் நடித்திருக்கிறார்கள். சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார்.
கடந்த ஒன்றாம் தேதி வெளியான இந்த திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றிருக்கிறது. தூத்துக்குடியில் ஜோஜு ஜார்ஜ் தம்பதியால் தத்தெடுக்கப்படும் சூர்யா, பூஜா ஹெக்டே மீது காதல் கொள்கிறார். இவர்களின் திருமணத்தின் போது ஏற்படும் சிக்கலால், சிறைக்கு செல்கிறார் சூர்யா.
பிறகு அங்கிருந்து தப்பி தனது காதலியை பார்க்க அந்தமான் செல்ல, அங்கு சிலரால் ஒரு பிரிவினர் அடிமைப்பட்டு கிடக்கின்றனர். அவர்களுக்கும் சூர்யாவுக்கும் என்ன சம்பந்தம், சூர்யா சிறை சென்றதற்கு காரணமான அந்த தங்க மீன் என்ன ஆனது என்பதுதான் இந்த மெட்ரோ திரைப்படத்தின் கதை. படம் ஆரம்பத்ததிலிருந்து பிரிந்து பல்வேறு பாதையில் செல்வதால் இந்த திரைப்படம் விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது.
இருப்பினும் ரெட்ரோ திரைப்படம் வசூல் ரீதியாக எந்த ஒரு குறையும் வைக்கவில்லை. உலகம் முழுவதும் ஒரே நாளில் மட்டும் 46 கோடி ரூபாய் வசூல் செய்தது. இந்த திரைப்படத்தைத் தொடர்ந்து தற்போது சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் நடித்து வருகிறார். திரிஷா லப்பர் பந்து சுவாசிகா உள்ளிட்டோர் இதில் இடம் பெற்றுள்ளனர்.
இதன் இறுதி கட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. தீபாவளிக்கு திரைப்படத்தை வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள். ஆன்மீகம் கலந்த பேண்டஸி ஜானரில் இந்த திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. படத்தில் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் சூர்யா வருகிறார். சாய் அபயங்கர் இதற்கு இசையமைக்கிறார்.
இதனைத் தொடர்ந்து சூர்யா அடுத்ததாக வாடிவாசல் திரைப்படத்தில்தான் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திடீரென அவர் தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரியுடன் கைகோர்த்து இருக்கிறார். இவர் தனுஷை வைத்து சார் திரைப்படத்தை இயக்கி இருந்தார். துல்கர் சல்மானுடன் அவர் கைகோர்த்த லக்கி பாஸ்கர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதனால் சூர்யா – வெங்கி அட்லூரி திரைப்படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்தத் திரைப்படத்தின் டிஜிட்டல் உரிமையை netflix நிறுவனம் வாங்கி இருப்பதாக சொல்லப்படுகிறது. 85 கோடி ரூபாய்க்கு உரிமத்தை பெற்றிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.





