- Advertisement -
Homeபொழுதுபோக்குபைசன் திரைப்படத்திலிருந்து வெளிவந்த முக்கியமான அப்டேட்... சூப்பராக சொன்ன மாரி செல்வராஜ்... போடு கபடி கபடி...

பைசன் திரைப்படத்திலிருந்து வெளிவந்த முக்கியமான அப்டேட்… சூப்பராக சொன்ன மாரி செல்வராஜ்… போடு கபடி கபடி…

- Advertisement -

பரியேறும் பெருமாள் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா மட்டுமல்ல இந்திய சினிமாவையே தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் இயக்குனர் மாரி செல்வராஜ். தனது முதல் திரைப்படத்திலேயே, சமூக மற்றும் சாதிய பாகுபாட்டை மிக ஆழமாக பதிவு செய்து கைத்தட்டலை பெற்றார். இதன்பிறகு அவரது கிராப் ஏறிக்கொண்டே செல்கிறது என்று கூறலாம்.

தனுசை வைத்து கர்ணன் திரைப்படத்தை இயக்கிய அவர், அடுத்ததாக மாமன்னன் காவியத்தை கொடுத்தார். இதனைத் தொடர்ந்து அவரது இயக்கம் மற்றும் தயாரிப்பில் உருவான வாழை திரைப்படம் தமிழ் சினிமாவில் வசூலில் சக்கை போடு போட்டது. இப்படியான சூழலில் தற்போது விக்ரம் மகன் துருவ்வை வைத்து பைசன் என்னும் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார்.

- Advertisement -

மாரி செல்வராஜ் கர்ணன் திரைப்படத்தை முடித்துவிட்டு, பைசன் படத்தை இயக்குவதாக தான் இருந்தது. நீலம் ப்ரொடக்சன் சார்பில் பா ரஞ்சித் இதனை தயாரிப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. அந்த சமயத்தில், உதயநிதி ஸ்டாலின் தனது கடைசி திரைப்படத்தை இயக்க கூறியதால், மாமன்னனை எடுக்கச் சென்றார் மாரி செல்வராஜ்.

இந்த இடைவேளையில் வேறு எந்த திரைப்படத்திலும் கமிட் ஆகாமல், பைசன் திரைப்படத்திற்காகவே காத்திருந்தார் துருவ் விக்ரம். அதுமட்டுமல்ல படத்தில் கபடி சம்பந்தப்பட்ட காட்சிகள் நிறைய இருக்கும் என்பதால், அந்த விளையாட்டையும் அவர் கற்றுக் கொண்டார். இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு நெல்லை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் பைசன் திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது.

- Advertisement -

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மனத்தி கணேசன் என்னும் கபடி வீரரின் வாழ்க்கையை தான் இந்த திரைப்படம் பிரதிபலிப்பதாக சொல்லப்படுகிறது. இதில், அனுபமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன், லால், பசுபதி, கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். நிவாஸ் கே பிரசாத் இதற்கு இசையமைத்துள்ளார்.

பைசன் திரைப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இப்படியான சூழலில் அந்த திரைப்படத்தின், தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை பைவ் ஸ்டார் நிறுவனம் கைப்பற்றி இருப்பதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. வரும் நாட்களில் இந்த திரைப்படத்தின் டிரைலர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்