- Advertisement -
Homeபொழுதுபோக்குஎன்னப்பா இப்படி பண்ணிட்டாங்க? ஏகே படங்கள் மாதிரியே நமக்கும் ஆயிடுச்சே? ஏமாற்றத்தில் நடிகர் கார்த்தி ரசிகர்கள்...

என்னப்பா இப்படி பண்ணிட்டாங்க? ஏகே படங்கள் மாதிரியே நமக்கும் ஆயிடுச்சே? ஏமாற்றத்தில் நடிகர் கார்த்தி ரசிகர்கள் புலம்பல்!

- Advertisement -

நடிகர் கார்த்தி முதலில் நடிகராக நாயகனாக அறிமுகமான படம் பருத்தி வீரன். இயக்குனர் அமீர் இயக்கத்தில் கடந்த 2007ம் ஆண்டில் இந்த படம் திரைக்கு வந்தது. அதன்பிறகு 2024ம் ஆண்டு வரை 18 ஆண்டுகளில் நடிகர் கார்த்தி நடிப்பில் 26 படங்கள் திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜூ முருகன் இயக்கத்தில் கார்த்தி நடித்த 25வது படம் ஜப்பான் படுதோல்வியை சந்தித்தது. அதன்பிறகு திரைக்கு வந்த மெய்யழகன் படம் நல்ல வரவேற்பை பெற்றது.

நடிகர் கார்த்தி நடித்த படங்களில் கொம்பன் நம்ம வீட்டுப்பிள்ளை தோழா கைதி நான் மகான் அல்ல ஆல்இன்ஆல் அழகுராஜா பையா சர்தார் தீரன் அதிகாரம் 1 சுல்தான் என பல படங்கள் பெரிய அளவில் வெற்றிப் படங்களாக இருந்திருக்கின்றன. இதில் கைதி சர்தார் தீரன் அதிகாரம் 1 போன்ற படங்கள் 2ம் பாகமாக உருவாக உள்ளது. சர்தார் 2 படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது.

நடிகர் கார்த்தி இப்போது மார்ஷல் என்ற படத்தில் நடிக்கிறார். இதுதவிர கைதி 2 படத்திலும் நடிக்க உள்ளார். இதற்கிடையே சர்தார் 2 படத்தை வருகிற தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்த நிலையில், நடிகர் சூர்யா நடித்த கருப்பு படம் தீபாவளிக்கு ரிலீஸ் என்பதால், கார்த்தி நடித்த சர்தார் 2 படத்தை வருகிற பொங்கலுக்கு அதாவது 2026ம் ஆண்டு ஜனவரி மாதம் தள்ளி வைத்து விட்டனர்.

கடந்தாண்டில் நடிகர் கார்த்தி, அரவிந்த்சாமி இணைந்து நடித்த மெய்யழகன் படம் வெளியானது. அதன்பிறகு 7 மாதங்கள் ஆன நிலையில் இந்த ஆண்டு ஜனவரி முதல் இதுவரை நடிகர் கார்த்தி நடிப்பில் எந்த படமும் வெளியாகவில்லை. சர்தார் 2 படமும் அடுத்த ஆண்டுதான் ரிலீஸ் என்று உறுதியாகி விட்டது.

மார்ஷல் கைதி 2 படங்களின் படப்பிடிப்பு இனிமேல்தான் துவங்க உள்ள நிலையில் இந்த படங்களும் இந்த ஆண்டில் ரிலீஸ் செய்யப்படவில்லை. ஏற்கனவே நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள வா வாத்தியார் என்ற படமும் இன்னும் படப்பிடிப்பு முடியவில்லை. இன்னும் 13 நாட்கள் மட்டுமே கால்ஷீட் தருவேன். ஆனால் அதுவும் அடுத்த 2026ம் ஆண்டில்தான் தருவேன் என்று நடிகர் கார்த்தி இயக்குனரிடம் உறுதியாக கூறியிருக்கிறார்.

அதனால் வா வாத்தியார் சர்தார் 2 கைதி 2 மார்ஷல் என அனைத்து படங்களுமே அடுத்த 2026ம் ஆண்டில்தான் திரைக்கு வர வாய்ப்புள்ளது. அதனால் கார்த்தி ரசிகர்களை பொறுத்த வரை இந்த ஆண்டு முழுவதும் கார்த்தி படம் எதுவுமே திரைக்கு வராது என்பதுதான் கசப்பான உண்மை. இது கார்த்தி ரசிகர்களை பலத்த ஏமாற்றத்தில் தள்ளியுள்ளது. வலிமை துணிவு படங்களுக்கு பிறகு 2023 2024ம் ஆண்டுகளில் அஜீத்குமார் படமே திரைக்கு வரவில்லை. 2025ம் ஆண்டில்தான் விடாமுயற்சியும் தொடர்ந்து குட்பேட் அக்லி படமும் வெளியானது. அதுபோன்ற ஒரு ஏமாற்றம் கார்த்தி ரசிகர்களுக்கும் ஏற்பட்டுள்ளது.

சற்று முன்