நடிகர் சிவகார்த்திகேயன், தமிழ் சினிமாவில் முன்ணனி நடிகராக இருந்து வருகிறார். கடந்த ஜனவரி 14ம் தேதியன்று பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான அயலான் படம், சிவகார்த்திகேயனுக்கு பிளாப் படமாக போய்விட்டது. அதன்பிறகு ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரித்த அமரன் படம் ரிலீஸாக இருக்கிறது. ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிங்கநடை என்ற படமும் உருவாகி வருகிறது.
அமரன் படம், ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜ் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டது. அதனால் இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருக்கிறது. அதே போல் பல வெற்றிப் படங்களை தந்த ஏஆர் முருகதாஸ், ரஜினி நடிப்பில் சர்கார் என்ற தோல்வி படத்தை தந்தார். அதனால் பல ஆண்டுகளுக்கு முன், சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் சிங்கநடை படத்தை பெரிய வெற்றிப் படமாக தருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு மத்தியில் நடிகராக மட்டுமின்றி தயாரிப்பாளராகும் உள்ள நடிகர் சிவகார்த்திகேயன், நடிகர் சூரி நடித்துள்ள கொட்டுக்காளி படத்தை தயாரித்துள்ளார். கூழாங்கல் படத்தை இயக்கிய பிஎஸ் வினோத் ராஜ் இந்த படத்தை இயக்கி உள்ளார். பின்னணி இசையே இல்லாமல் இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. விடுதலை, கருடன் என்ற 2 வெற்றிப் படங்களை தந்த சூரிக்கு அவர் கதாநாயகனாக நடிக்கும் 3வது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நேற்று முன்தினம் கொட்டுக்காளி படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நடந்தது. இதில் பங்கேற்ற நடிகர் சிவகார்த்திகேயன் பேசியதாவது, கடந்த 2003ம் ஆண்டில் நடிகர் விக்ரம் சாமி, தூள், பிதாமகன் என்ற 3 பிளாக்பஸ்டர் வெற்றிப் படங்களை கொடுத்தார். அதே போல் விடுதலை, கருடன், கொட்டுக்காளி ஆகிய படங்கள் நடிகர் சூரிக்கு அமைந்திருக்கின்றன.
கொட்டுக்காளி படத்தில் நடித்ததற்கு சூரிக்கு, நிச்சயமாக தேசிய விருது கிடைக்கும். அந்தளவுக்கு சிறப்பாக இந்த படத்தில் நடித்திருக்கிறார். ஒருவேளை இந்த படத்தில் மிஸ் ஆனால், வெற்றிமாறன் இயக்கிய படத்தில் நிச்சயமாக கிடைக்கும் என்றார். மேலும் விக்ரமுடன் சூரியை ஒப்பிட்டு பேசுகிறேன் என நினைக்க வேண்டாம் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
பா ரஞ்சித் இயக்கத்தில் நாளை வெளியாகும் தங்கலான் படத்தில் நடித்த விக்ரமுக்கு தேசிய விருது கிடைக்கும் என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.இந்நிலையில், 2 வெற்றி படங்களை மட்டுமே தந்த நடிகர் சூரிக்கு, தேசிய விருது கிடைக்கும் என சிவகார்த்திகேயன் பேசியிருப்பது, விக்ரம் ரசிகர்களை எரிச்சலடைய வைத்துள்ளது. தேசிய விருது தரும் அளவுக்கு சூரி என்ன அவ்வளவு பெரிய நடிகரா, என்றும் கலாய்த்து வருகின்றனர்.





