இயக்குனர் தமிழ் தயாளன் இயக்கத்தில் கடந்த 18ம் தேதி வெளியான படம் கெவி. இந்த படத்தில் ஆதவன் ஷீலா ஜாக்குலின் சார்லஸ் வினோத் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த படம் நல்ல வரவேற்பை ரசிகர்களிடம் பெற்றிருக்கிறது. மலைவாழ் கிராம மக்களின் வாழ்க்கை அவலங்களை சொல்லும் கதைக்களத்தில் இந்த படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த படத்தில் ஷீலா கதாநாயகியாக நடித்துள்ள நிலையில், நடிகை ஜாக்குலின் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார். இவர் விஜய் டிவியில் தொகுப்பாளராக இருந்து மக்களிடம் பிரபலமானவர். நெல்சன் இயக்கத்தில் கதையின் நாயகியாக நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா படத்தில், அவரது தங்கையாக நடித்திருந்தார்.
மேலும் கடந்தாண்டில் நடந்த விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் 8ல் ஒரு போட்டியாளராகவும் ஜாக்குலின் கலந்துக்கொண்டார். பிக்பாஸ் வீட்டுக்கு வெளியே வைக்கப்பட்ட பணப்பெட்டியை எடுக்கப் போய், கடைசி குறிப்பிட்ட நேரத்துக்குள் வீட்டுக்குள் ஓடிவர முடியாமல் அவர் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கெவி படப்பிடிப்பின் போது வளரும் நடிகையாக உள்ள ஜாக்குலின் செய்த அட்ராசிட்டி குறித்த அதிர்ச்சிகரமான தகவல்களை இப்போது வெளியாகி உள்ளது. அதாவது கெவி படத்தில் நடித்த ஜாக்குலின், படத்தில் நான் 40 நிமிடங்கள் வர வேண்டும். அதில் ஒரு நிமிடம் குறைந்தாலும் நடப்பதே வேறு என்று இயக்குனரை மிரட்டியிருக்கிறார்.
மேலும் படத்தின் கிளைமாக்ஸ் காட்சி படப்பிடிப்பு நடந்த போதே, எனது முழு சம்பளத்தையும் இப்போதே தர வேண்டும். இல்லை என்றால் தொடர்ந்து நடிக்க மாட்டேன் என்று பிரச்னை செய்திருக்கிறார். வேறு வழியின்றி எப்படியோ சமாளித்து அவருக்கு தர வேண்டிய சம்பளத்தையும் பரட்டி படக்குழு தந்திருக்கிறது. ஆனால் சம்பளத்தை வாங்கிய பிறகும் நடிக்க வர முடியாது என மறுத்திருக்கிறார். அதன்பிறகு உதவி இயக்குனர் ஒருவருக்கு ஜாக்குலின் போலவே டிரஸ் அணிவித்து மேக்கப் செய்து அந்த கிளைமாக்ஸ் காட்சியை படக்குழுவினர் எடுத்து முடித்திருக்கின்றனர்.
மேலும் படத்தின் பிரமோசனுக்கு அவரை அழைத்த போது, படத்தை போட்டுக் காட்டினால் முழு படத்தையும் பார்த்துவிட்டு தான் பிரமோசனுக்கு வருவேன் என்று கூறியிருக்கிறார். படத்தை போட்டி காட்டிய பிறகும் பிரமோசனுக்கு வர மறுத்திருக்கிறார். இந்த படப்பிடிப்பில் ஜாக்குலின் செய்த டார்ச்சரை மறக்கவே முடியாது என படக்குழுவினர் கதறி இருக்கின்றனர். வழக்கமாக நயன்தாரா தான் இப்படி எல்லாம் நடந்துக் கொள்வார். இப்போது அவரையே ஜாக்குலின் மிஞ்சி விட்டதாக மூத்த சினிமா பத்திரிகையாளர் வலைப்பேச்சு ஜெ பிஸ்மி ஒரு வீடியோவில் கூறியிருக்கிறார்.





