- Advertisement -
Homeபொழுதுபோக்குஎன்னோட பேரு குஷ்பு… எனக்கு இன்னொரு பேரு இருக்கு, பாட்ஷா ரஜினி ஸ்டைலில் பில்டப் செய்த...

என்னோட பேரு குஷ்பு… எனக்கு இன்னொரு பேரு இருக்கு, பாட்ஷா ரஜினி ஸ்டைலில் பில்டப் செய்த குஷ்பு – இலங்கை விவகாரத்தில் அவரது விளக்கம்

- Advertisement -

நடிகை குஷ்பு, தமிழ் சினிமாவில் 35 ஆண்டுகளுக்கு மேலாக வலம் வந்துக்கொண்டிருக்கும் பிரபல நடிகை. தர்மத்தின் தலைவன் படத்தில் பிரபுவுக்கு ஜோடியாக அறிமுகமாகி, சின்னதம்பி படம் மூலம், தமிழில் முக்கிய நடிகையாக மாறினார். குஷ்புவுக்கு ரசிகர்கள் கோவில் கட்டியதாக எல்லாம் ஒருகாலத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.

தமிழ் சினிமாவில் நடிகையாக மட்டுமின்றி ஒரு கட்டத்தில் அரசியல்வாதியாக மாறினார் குஷ்பு. முதலில் திமுகவில் இணைந்த குஷ்பு, பின்னர் கனிமொழிக்கும் அவருக்கும் ஏற்பட்ட மறைமுக பனிப்போரால் காங்கிரஸ் கட்சிக்கு மாறினார். அங்கும் சரியான அங்கீகாரம் கிடைக்காததால் இப்போது பாஜகவில் முக்கிய பொறுப்பில் இருக்கிறார் குஷ்பு.

- Advertisement -

முதலில் பிரபுவை, குஷ்பு திருமணம் செய்துகொண்டதாக ஒரு சர்ச்சை பரவிய நிலையில், அது வதந்தி என கூறப்பட்டது. ஆனால் அதற்கு பிறகு குஷ்பு, பிரபுவுடன் இணைந்து நடிக்கவில்லை. பிறகு சுந்தர் சியை காதல் திருமணம் செய்துக்கொண்ட குஷ்பு, இப்போதும் படங்களில் நடிக்கிறார். சீரியல்களை தயாரிக்கிறார். அரசியல், சினிமா, சீரியல் என எப்போதும் பிஸியாகவே இருக்கிறார்.

இலங்கையில் இப்போது அதிகளவில் தமிழ் படங்கள் இயக்கப்படுகின்றன. அங்கு ரிலீஸ் செய்யப்படும் தமிழ் படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. சமீபத்தில் வெளியான ஜெயிலர், லியோ படங்களை இலங்கையில் உள்ள சினிமா ரசிகர்கள் வரவேற்று கொண்டாடியதால், வசூல் பல கோடி ரூபாய் கடந்தது. பிரபல இசையமைப்பாளர்களின் இசை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகின்றன.

- Advertisement -

சமீபத்தில் இலங்கையில் உள்ள மக்களுக்கு, இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், இலவசமாக ஒரு இசை நிகழ்ச்சியை நடத்தினார். அதைத்தொடர்ந்து விரைவில் பாடகர் ஹரிஹரன் பங்கேற்கும் இசை விழா நடக்க இருப்பதாகவும், அதில் தொகுப்பாளராக நடிகை குஷ்பு பங்கேற்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. இப்போது அதிலிருந்து குஷ்பு விலகிவிட்டதாக தெரிகிறது.

குஷ்பு இலங்கை தமிழர்களுக்கு எதிரானவர் என, அங்குள்ள சில தமிழ் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தால், இலங்கை நிகழ்ச்சியில் குஷ்பு பங்கேற்கவில்லை என ஒரு தகவல் பரவியது. இதற்கு தனது எக்ஸ் பக்கத்தில் பதிலளித்துள்ள குஷ்பு, நான் யாருக்கும் பயப்படவில்லை. என் மாமியாருக்கு இதய அறுவை சிகிச்சை நடக்க உள்ளதால், இலங்கை நிகழ்ச்சிக்கு வர இயலவில்லை. முகம் தெரியாத, பெயர் தெரியாத யாரும் என்னை மிரட்ட முடியாது. என்னுடைய இன்னொரு பெயர் தைரியம் என குறிப்பிட்டுள்ளார் குஷ்பு.

- Advertisement -

சற்று முன்