- Advertisement -
Homeபொழுதுபோக்குமாவட்ட செயலாளர்களுக்கு தவெக தலைவர் விஜய் போட்ட திடீர் உத்தரவு - தளபதியின் மக்கள் சந்திப்பு...

மாவட்ட செயலாளர்களுக்கு தவெக தலைவர் விஜய் போட்ட திடீர் உத்தரவு – தளபதியின் மக்கள் சந்திப்பு சுற்றுப் பயணம் எப்போது? வெளியான லேட்டஸ்ட் தகவல்!

- Advertisement -

தனது கடைசி படம் ஜனநாயகன் படப்பிடிப்பை சில மாதங்களுக்கு முன்பே முடித்துவிட்ட நடிகர் விஜய் அடுத்ததாக தமிழக வெற்றிக் கழகம் கட்சிப் பணிகளில் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறார். வருகிற 25ம் தேதி மதுரையில் கட்சியின் 2வது மாநில மாநாடு நடக்க இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை தவெக மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த மாநாடு நடப்பது மதுரையில்தான். அன்றுதான் மறைந்த நடிகர் கேப்டன் விஜயகாந்தின் பிறந்த நாள் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் விஜய் நடிக்க வந்த ஆரம்ப காலகட்டத்தில் நடிகர் விஜயின் வளர்ச்சிக்காக செந்தூரப்பாண்டி படத்தில் விஜய்க்கு அண்ணனாக விஜயகாந்த் நடித்திருந்தார். மேலும் ஆகஸ்ட் 25ம் தேதி, நடிகர் விஜய், சங்கீதாவின் 26வது திருமண நாள் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.

- Advertisement -

இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் நடிகர் விஜய் மாவட்ட செயலாளர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி இருக்கிறார். அதில் நடிகர் விஜய் கூறியிருப்பதாவது, மாவட்ட செயலாளர்கள் தங்களது பொறுப்பில் உள்ள தொகுதிகளுக்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளில் முகவர்களுக்கான ஆலோசனை கூட்டங்களை நடத்த வேண்டும்.

விரைவில் ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி கட்சி தலைமைக்கு அந்த தகவல்களை அனுப்ப வேண்டும். உறுப்பினர் சேர்க்கை, மக்கள் பிரச்னைகளை முன்னிறுத்தி போராட்டங்கள், கொள்கை விளக்க பொதுக்கூட்டங்களை நடத்தவும் வேண்டும் என்றும் அந்த சுற்றறிக்கையில் கட்சித் தலைவர் விஜய் மாவட்ட செயலாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

- Advertisement -

மேலும் 2026ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலுக்கு 9 மாதங்கள் இருக்கும் நிலையில், மக்கள் விரும்பும் முதலமைச்சர் வேட்பாளர் விஜய் என்பதை மக்கள் மத்தியில் கொண்டு செல்லுங்கள் என்று தவெக கட்சியினருக்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்லி ஆனந்த் அறிவுரை வழங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும் நடிகர் விஜய் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தொகுதி வாரியாக மக்களை சந்திக்க திட்டமிட்டுள்ளார். இதற்காக வருகிற செப்டம்பர் மாதம் முதல் மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணத்துக்கு விஜய் தயாராகி வருகிறார். இந்த சுற்றுப்பயணத்தை தந்தை பெரியார் பிறந்த நாளான செப்டம்பர் 17ம் தேதி அவர் துவங்க இருப்பதாகவும் முக்கியத் தகவல் வெளியாகி உள்ளது. பெரியார் பிறந்த ஊரான ஈரோடு மாவட்டத்தில் இருந்து விஜய் இந்த மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணத்தை விஜய் துவங்க அதிக வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்