இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி நித்யா மேனன் உள்ளிட்டோர் நடித்த தலைவன் தலைவி படம் நேற்று வௌியானது. இந்த படம் குறித்து சினிமா விமர்சகர் ப்ளு சட்டை மாறன் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது, படத்தின் ஆரம்பத்தில் விஜய் சேதுபதியும் நித்யா மேனனும் திருமணம் செய்து கொள்கிறார்கள். கொஞ்ச நாளில் இருவருக்கும் இடையில் சண்டை வருகிறது. அதனால் பிரிந்து விடுகிறார்கள்.
கொஞ்ச நாட்களில் சேர்ந்து விடுகிறார்கள். அதன் பின்னர் மீண்டும் சண்டை போடுகிறார்கள், பிரிகிறார்கள். மீண்டும் மீண்டும் மீண்டும் சண்டை போடுகிறார்கள், பிரிகிறார்கள். அதன் பின்னர் சேர்கிறார்கள். படம் முடிவதற்குள் எப்போதாவது முழுவதுமாக பிரிகிறார்கள் என்றால் அதுதான் இல்லை. இப்படி வித்யாசமான கதை கொண்டதுதான் இந்த படம். இது பாண்டிராஜ் படம் என்பதால் கிளைமாக்ஸ்சில் ஹீரோயினும் ஹீரோவும் பிரிகிறார்கள் என்றால், கொரியன் படத்தின் வருவது போல வெட்டிக் கொள்ளும் குத்திக் கொண்டுமா சாவார்கள்?
கேட்டால் குடும்பம் என்றால் அப்படித்தான் இருக்கும். சண்டை போடுவார்கள் சேர்ந்து கொள்வார்கள். குடும்பம் என்றால் சண்டை போடுவார்கள், ஆனால் இந்த படத்தில் காரண காரியமே இல்லாமல் சண்டை போடுகிறார்கள். காரண காரியமே இல்லாமல் சேர்ந்து கொள்கிறார்கள். பைத்தியமா அவர்கள்? அவர்கள் பைத்தியமா, படம் பார்க்கிற நாம பைத்தியமா? சண்டை போட்டால் கூட பரவாயில்லை. வெறுமனே கத்துகிறார்கள். ஸ்பீக்கர் கிழிவதை போல கத்துகிறார்கள்.
விஜய் சேதுபதி எல்லாம் கத்திக் கொண்டே இருக்கிறார். நித்யா மேனனும் விஜய் சேதுபதிக்கு போட்டியாக கத்திக் கொண்டே இருக்கிறது. படத்தில் வரும் எல்லா கேரக்டர்களுமே கத்திக் கொண்டே இருக்கிறார்கள். ஒரே கூச்சலாக உள்ளது. வழக்கமாக நன்றாக நடிக்கும் விஜய் சேதுபதி நித்யாமேனன் உள்ளிட்டோர் வாங்கிய பணத்துக்கு மேலே நடித்து விட்டார்கள். படத்தில் வரும் அனைத்து கதாபாத்திரங்களுமே ஓவர் ஆக்டிங் தான்.
படத்தில் கதையே இல்லாமல் கதாநாயகனும் கதாநாயகியும் பிரிந்தார்கள் சேர்ந்தார்கள், பிரிந்தார்கள் சேர்ந்தார்கள் என்பதையே படமாக எடுத்து வைத்துள்ளார்கள். அவர்கள் இளம் ஜோடிகள் என்று படத்தை காட்டுகிறார்கள். தமிழ் சினிமாக்காரர்கள் கொஞ்சம் கூட பயமில்லாமல் எதையும் செய்ய துணிந்து விட்டார்கள். குலதெய்வம் கோயில் பரோட்டா கடை கதாநாயகி வீடு என மூன்று லொகேஷன்களில் படத்தை முடித்து விட்டார்கள். படத்தில் நல்ல மெசேஜ் சொல்லி உள்ளார்கள்.
குடும்பம் என்றால் என்ன, குடும்பம் நடத்துவது எப்படி என இந்த படத்தை பார்த்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என நினைத்தால் கட்டாயமாக இந்த படத்தை போய் பார்த்துக் கொள்ளுங்கள். நாங்கள் குடும்பம் நடத்துவதில் பிஎச்டி முதலிடம் பெற்றவர்கள். முதலில் படம் எடுப்பது எப்படி என்று நீங்கள் கற்றுக்கொள்ளுங்கள் என நினைப்பவர்கள் இந்த பக்கம் போய் விடாதீர்கள் என தலைவன் தலைவி படம் குறித்து ப்ளு சட்டை மாறன் கடுமையாக விமர்சித்து இருக்கிறார். இது இணையத்தில் வைரலாகி வருகிறது.





