- Advertisement -
Homeபொழுதுபோக்குதிடீரென தனது படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்த நடிகர் விஜய் ஆண்டனி - சக்தி...

திடீரென தனது படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்த நடிகர் விஜய் ஆண்டனி – சக்தி திருமகன் படம் எப்போ ரிலீஸ் ஆகுது தெரியுமா?

- Advertisement -

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி பல வெற்றிப் படங்களுக்கு இசையமைத்தவர் விஜய் ஆண்டனி. பிறகு நடிகராகவும் மாறினார். நான் சலீம் இந்தியா பாகிஸ்தான் திமிரு புடிச்சவன் பிச்சைக்காரன் பிச்சைக்காரன் 2 அண்ணாதுரை எமன் ரோமியோ என பல படங்களில் விஜய் ஆண்டனி நாயகனாக நடித்திருக்கிறார். கடைசியாக விஜய் ஆண்டனி நடிப்பில் மார்கன் படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

விஜய் ஆண்டனி அவர் நடிக்கும் படங்களுக்கு அவரே இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் தயாரிப்பாளராகவும் பல படங்களை தயாரித்து வருகிறார். பிச்சைக்காரன் படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து பிச்சைக்காரன் 2 படத்தை அவரே தயாரித்து இயக்கினார். ஆனால் அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

- Advertisement -

அதே போல் இன்ஸ்பெக்டர் முருகவேல் என்ற கேரக்டரில் விஜய் ஆண்டனி நடித்த திமிரு புடிச்சன் என்ற படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற படமாக இருந்தது. இதில் நாயகியாக நிவேதா பெத்துராஜ் நடித்திருந்தார். தொடர்ந்து தன படங்களுக்கு மட்டுமே இசையமைத்து வரும் விஜய் ஆண்டனி, இனி மற்ற ஹீரோக்களின் படங்களுக்கும் இசையமைப்பேன் என்று சமீபத்தில் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் நடிகர் விஜய் ஆண்டனி நடித்த அவரது 25வது படம் சக்தி திருமகன் வருகிற செப்டம்பர் 5ம் தேதி வெளியாகும் என்று ஏற்கனவே அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த படத்தை டைரக்டர் அருண் பிரபு டைரக்ட் செய்திருக்கிறார். இதற்கு முன்பு டைரக்டர் அருண் பிரபு அருவி மற்றும் வாழ் போன்ற வெற்றி படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சக்தி திருமகன் படத்தில் நாயகியாக த்ரிப்தி நடித்திருக்கிறார். இவர் ஒரு விளம்பர மாடல் நடிகை என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு த்ரிப்தி அமேசான் மினி வெப் படம் ஒன்றிலும் நடித்திருக்கிறார். விஜய் ஆண்டனி சக்தி திருமகன் படத்துக்கு தெலுங்கு வெர்சனில் பராசக்தி என பெயர் வைத்திருந்த நிலையில், தமிழில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பராசக்தி படம் என்ற உருவானதால், அந்த டைட்டிலை விட்டுக் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சூழலில் நடிகர் விஜய் ஆண்டனி தன்னுடைய எக்ஸ் வலைதள பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டு இருக்கிறார். அதில் சக்தி திருமகன் திரைப்படம் வருகிற செப்டம்பர் 5ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த தேதியில் இந்த படம் வெளியாகவில்லை. சக்தி திருமகன் படம் ரிலீஸ் செப்டம்பர் 19ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக அவர் அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்