- Advertisement -
Homeபொழுதுபோக்குவிடாமுயற்சி படப்பிடிப்பில், பிடிவாதம் பிடித்த அஜீத், அஜர்பைஜானுக்கு வேடிக்கை மட்டுமே பார்க்க சென்ற 2 பேர்...

விடாமுயற்சி படப்பிடிப்பில், பிடிவாதம் பிடித்த அஜீத், அஜர்பைஜானுக்கு வேடிக்கை மட்டுமே பார்க்க சென்ற 2 பேர் – லேட்டஸ்ட் அப்டேட் இது

- Advertisement -

நடிகர் அஜீத்குமார் இப்போது அஜர்பைஜானில் விடாமுயற்சி படப்பிடிப்பில் இருந்து வருகிறார். திரிஷா, அர்ஜூன் உள்ளிட்டோர் நடிக்கும் இந்த படத்தை மகிழ்திருமேனி இயக்கி வருகிறார். அஜர்பைஜானில், கடந்த அக்டோபர் மாதம் 4ம் தேதி துவங்கிய படப்பிடிப்பு, 45 நாட்கள் நீடித்தது. படப்பிடிப்பு துவங்கிய சில வாரங்களில், கலை இயக்குநர் மிலன் மறைந்த நிலையில், படப்பிடிப்பு தடைபட்டது, சில நாட்களுக்கு பின் மீண்டும் ஷூட்டிங் துவங்கப்பட்டது.

இந்நிலையில், மணல் புயல் காரணமாக அங்கு ஷூட்டிங் எடுக்க முடியாத நிலையில், 2 வாரங்களுக்கு முன் சென்னை திரும்பிய அஜீத்குமார், டைரக்டர் மகிழ்திருமேனி உள்ளிட்ட படக்குழு மீண்டும் இப்போது அஜர்பைஜானுக்கு புறபட்டுச் சென்றிருக்கிறது. 2ம் கட்ட படப்பிடிப்பு வெகு வேகமாக நடந்து வருகிறது. வரும் ஜனவரி 30 வரை இந்த படப்பிடிப்பு நடக்க திட்டமிடப்பட்டுள்ளது.

- Advertisement -

இந்த படத்துக்கு பிறகு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவும், அதையடுத்து இயக்குநர் வெற்றிமாறன் படத்திலும் நடிக்க அஜீத்குமார் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. தெலுங்கு படத்தயாரிப்பு நிறுவனமாக மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் படத்தை, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவும், எல்டர் குமார் தயாரிக்கும் படத்தை வெற்றிமாறன் இயக்கவும் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதற்கிடையே வாடிவாசல் படத்தில் அமீர் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். அந்த கேரக்டரில் அமீருக்கு பதிலாக, மோகன்லால் நடித்தால் நன்றாக இருக்கும். நான் பேசினால் அவர் சம்மதிப்பார் என படத்தின் ஹீரோ சூர்யா, வெற்றிமாறனிடம் கூறியிருக்கிறார். இதனால் கோபமடைந்த வெற்றிமாறன், இந்த படத்தில் யார் இருக்க வேண்டும் என முடிவு செய்ய வேண்டியவன் நான். அமீர்தான் அந்த கேரக்டரில் நடிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -

அதன்பிறகு அமீர் தான் இந்த படத்தில் நடிக்க வேண்டும். அமீருடன் நடிக்க உங்களுக்கு நடிக்க விருப்பம் இல்லை எனில் விலகி கொள்ளுங்கள் என்றும் சூர்யாவிடம் கூறியிருக்கிறார். அதனால், வாடிவாசல் படத்தை விட்டு சூர்யா வெளியேறினால், அந்த கேரக்டரில் அஜீத் நடிப்பாரா என்ற கேள்வி பலரிடையே எழுந்துள்ளது.

இதுகுறித்து சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய சினிமா விமர்சகர் செய்யாறு பாலு, வாடிவாசல் படத்தில் அஜீத் நடிக்க வாய்ப்பே இல்லை. அவர் சம்மதிக்கவும் மாட்டார். ஏனெனில் மாடுபிடிக்கும் காட்சிகளில் அஜீத் நடிக்க வாய்ப்பே இல்லை. டூப் போட்டும் நடிக்கவும் அஜீத்குமாருக்கு பிடிக்காது. ஏனெனில் அஜர்பைஜானில் நடந்துவரும் ஷூட்டிங்கில் அஜீத்குமார் டூப்பே போடாமல் நடித்து வருகிறார். ரிஸ்க் ஆன காட்சிகளில் நடிக்க முன் எச்சரிக்கையாக அஜர்பைஜானுக்கு அழைத்து செல்லப்பட்ட இரண்டு டூப் நடிகர்களை சும்மா உட்கார வைத்தே, இரண்டு சம்பளம் கொடுத்துக் கொண்டு இருக்கின்றனர். அஜீத் அவர்களை நடிக்க விடாமல், ரிஸ்க் ஆன காட்சிகளிலும் அவரே நடித்து வருகிறார், என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்