- Advertisement -
Homeபொழுதுபோக்குபருத்திவீரன் சித்தப்பு நடிகர் சரவணன் மீண்டும் ஹீரோவாக நடிக்கும் படம்… டைட்டிலே அசத்துதே… - போலீஸ்...

பருத்திவீரன் சித்தப்பு நடிகர் சரவணன் மீண்டும் ஹீரோவாக நடிக்கும் படம்… டைட்டிலே அசத்துதே… – போலீஸ் ஃபேமிலி படத்தின் கதைக்களம் இதுதான்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் கடந்த 1990களில் அறிமுகமானவர் நடிகர் சரவணன். பார்வதி என்னை பாரடி அபிராமி மாமியார் வீடு பொண்டாட்டி ராஜ்ஜியம் தாய்மனசு சந்தோசம் தம்பிதுரை சூரியன் சந்திரன் என பல படங்களில் நாயகனாக நடித்தார். நடிகர் சரவணன் நடித்த பல படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று அவருக்கு ஒரு நல்ல அடையாளத்தை கொடுத்தன.

ஆனால் ஒரு கட்டத்துக்கு பிறகு அவருக்கு ஹீரோ வாய்ப்புகள் வரவில்லை. அதன்பிறகு 2007ம் ஆண்டில் அமீர் இயக்கத்தில் நடிகர் கார்த்தி அறிமுகமான பருத்திவீரன் படத்தில் சித்தப்பு கேரக்டரில் நடித்து நடிகர் சரவணன் ரீ என்ட்ரி கொடுத்தார். தொடர்ந்து கோலமாவு கோகிலா ஜெயிலர் கடைக்குட்டி சிங்கம் அரண்மனை என பல படங்களில் சரவணன் நடித்து வருகிறார்.

- Advertisement -

ஏற்கனவே பகை மிரள என்ற படத்தை இயக்கியவர் பாலு. இவர் தற்போது போலீஸ் ஃபேமிலி என்ற படத்தை டைரக்ட் செய்திருக்கிறார். இந்த படத்தில் பருத்திவீரன் சித்தப்பு நடிகர் சரவணன் கதாநாயகனாக நடித்திருக்கிறார். பல ஆண்டுகளுக்கு பின் மீண்டும் அவர் ஹீரோவாக ரீ என்ட்ரி கொடுக்கும் படமாக இது உள்ளது.

மேலும் காதல் படத்தில் காமெடி கேரக்டரில் நடித்த காதல் சுகுமார் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார். மும்பையைச் சேர்ந்த சுரேகா மற்றும் நிஷா துபே இந்த படத்தில் கதாநாயகிகளாக நடித்திருக்கின்றனர். சஸ்பென்ஸ் நிறைந்த க்ரைம் திரில்லர் படமாக போலீஸ் ஃபேமிலி படம் உருவாகியுள்ளது.

- Advertisement -

போலீஸ் ஃபேமிலி படத்தின் பர்ஸ்ட் லுக்கை இயக்குனர்கள் சசிகுமார் பாண்டிராஜ் நடிகர்கள் சரவணன் மற்றும் வெற்றி காளி வெங்கட் ஆகியோர் வெளியிட்டனர். போலீஸ் ஃபேமிலி படத்தின் கதை குறித்து படக்குழுவினர் கூறியதாவது, சஸ்பென்ஸ் திரில்லர் எமோஷனல் கலந்த ஒரு படமாக போலீஸ் ஃபேமிலி படம் உருவாகியுள்ளது. ஒரு போலீஸ் ஸ்டேஷனில் போலீசார் எப்படி பணிபுரிகிறார்கள், அவர்களுக்கு வரக்கூடிய சில எதிர்ப்புகள் சில பிரச்சனைகளால் அவர்கள் குடும்பத்திற்கு என்னென்ன பிரச்சனைகள் தொல்லைகள் வருகிறது.

அதை எல்லாம் எப்படி அவர்கள் சாதுரியமாக கையாண்டு மீண்டு வருகிறார்கள். அதில் அவர்கள் என்னென்ன இழப்பை சந்திக்கிறார்கள் என்பதை மையப்படுத்தி போலீஸ் ஃபேமிலி படம் உருவாகியுள்ளது. இந்த கதைக்கு மிகவும் பொருத்தமாக இருந்ததால்தான் படத்துக்கு போலீஸ் ஃபேமிலி என்ற டைட்டில் அதுவாகவே அமைந்துவிட்டது. கதைக்கான டைட்டிலை அந்த படமே தேடிக் கொண்டது. படம் பார்க்கும்போது கதையில் அதற்கான நியாயம் இருப்பதை ரசிகர்கள் உணர முடியும் என்று படக்குழுவினர் கூறியிருக்கின்றனர்.

- Advertisement -

சற்று முன்