- Advertisement -
Homeபொழுதுபோக்குபிரபாஸ் நடித்த கல்கி ஓடிடியில் ரிலீஸ் எப்போது தெரியுமா? போடு வெடிய - ஆனா அப்பவாச்சும்...

பிரபாஸ் நடித்த கல்கி ஓடிடியில் ரிலீஸ் எப்போது தெரியுமா? போடு வெடிய – ஆனா அப்பவாச்சும் படம் ரசிகர்களுக்கு புரியுமான்னு தெரியலையே…

- Advertisement -

நடிகர் பிரபாஸ் நடிப்பில் கடந்த மாதம் ஜூன் 27 ஆம் தேதி வெளியான படம் கல்கி 2898 ஏடி. இந்த படம் பான் இந்தியா படமாக உருவாகி பல மொழிகளில் வெளிவந்துள்ளது. கல்கி படத்துக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இதுவரை கல்கி 2898 ஏடி படம் 900 கோடி ரூபாய் வசூலை கடந்துள்ள நிலையில் இன்னும் சில தினங்களில் 1000 கோடி ரூபாய் என்ற வசூல் சாதனையை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இந்த படம் தமிழ்நாட்டிலும் கேரளத்திலும் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

நடிகர் பிரபாஸ், ராஜமவுலி இயக்கத்தில் பாகுபலி படத்தில் நடித்த பிறகு அவர் ஒரு பான் இந்தியா ஸ்டார் நடிகராக மாறிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது பிரபாஸ் நடிப்பில் வெளிவந்துள்ள பேண்டஸி படமாக கல்கி 2898 ஏடி பார்க்கப்படுகிறது. இரண்டே வாரத்தில் ஆயிரம் கோடி ரூபாய் வசூலை நெருங்கும் இந்த படத்துக்கு, ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மகாபாரத கதையுடன் இன்றைய கலியுகத்தில் தொடர்புபடுத்தி கல்கி படத்தை ஹாலிவுட் ரேஞ்சுக்கு இயக்கியுள்ளார் படத்தின் டைரக்டர் நாக் அஸ்வின். 740 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இந்த படத்தில் பிரபாஸூடன் பாலிவுட் சீனியர் நடிகர் அமிதாப் பச்சன் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார்.

- Advertisement -

மேலும் இந்த படத்தில் தீபிகா படுகோன் நாயகியாக நடித்துள்ளார். படத்தில் மிக முக்கிய அம்சமாக உலகநாயகன் நடிகர் கமல்ஹாசன் வில்லன் கேரக்டரில் நடித்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அத்துடன் இந்த படத்தில் மிருணாள் தாகூர், டைரக்டர் ராஜமௌலி, தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா, டைரக்டர் ராம் கோபால் வர்மா ஆகியோரும் கேமியோ ரோலில் நடித்துள்ளனர். இந்த படத்தில் முக்கியமான கேரக்டரில் மலையாள நடிகர் துல்கர் சல்மான் நடித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

கல்கி படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த முக்கிய தகவல் இப்போது வெளியாகி உள்ளது. இந்த படத்தின் டிஜிட்டல் உரிமையை அமேசான் பிரைம் நிறுவனம் மிகப்பெரிய தொகைக்கு வாங்கி உள்ள நிலையில், கல்கி படம் எப்போது வெளியாகும் என்ற சஸ்பென்ஸ் இதுவரை நீடித்து வந்தது. இந்நிலையில் வருகிற ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தன்று கல்கி ஓடிடியில் ரிலீஸ் ஆகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்