- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் பிரபாஸூக்கு விரைவில் டும்டும்டும்… திருமண ஏற்பாடுகளில் அவரது குடும்பத்தினர் - மணப்பெண் அந்த...

நடிகர் பிரபாஸூக்கு விரைவில் டும்டும்டும்… திருமண ஏற்பாடுகளில் அவரது குடும்பத்தினர் – மணப்பெண் அந்த நடிகைதானா என கேள்வி எழுப்பும் ரசிகர்கள்!

- Advertisement -

தெலுங்கு சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருந்தவர் நடிகர் பிரபாஸ். ரசிகர்களுக்கு பல வெற்றிப் படங்களை கொடுத்திருக்கிறார். இயக்குனர் ராஜமவுலி இயக்கிய பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களிலும் அவர் ஹீரோவாக நடித்த நிலையில், அந்த படங்கள் பிளாக் பஸ்டர் மூவியாக வெற்றி பெற்றதால் பிரபாஸ் உலக அளவில் பிரபலமாகிவிட்டார்.

இப்போது நடிகர் பிரபாஸ் பான் இந்தியா ஸ்டார் நடிகராக இந்திய சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார். தொடர்ந்து அவர் பான் இந்தியா படங்களில் நடித்து வருகிறார். நடிகர் பிரபாஸூக்கு இப்போது 45 வயதான நிலையில் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் முரட்டு சிங்கிளாக இருந்து வருகிறார்.

- Advertisement -

பாகுபலி படத்தில் நடித்த போது நடிகர் பிரபாஸூக்கும் அவருடன் ஜோடியாக தேவசேனை என்ற கேரக்டரில் நடித்த நடிகை அனுஷ்காவுக்கும் இடையே காதல் ஏற்பட்டதாகவும் இருவரும் நெருக்கமான காதலில் உள்ள நிலையில் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் பரபரப்பு செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது. ஆனால் இருவருமே இதுபற்றிய எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.

இதையடுத்து நடிகர் பிரபாஸூக்கு அவரது பெற்றோர் பெண் பார்த்து வருவதாக தொடர்ந்து தகவல் வெளியாகி வந்தது. எனினும் ரசிகர்கள் மத்தியில் நடிகர் பிரபாஸூக்கு திருமணம் எப்போது என்பதும் பெரிய கேள்வியாகவும் இருந்து வருகிறது. ஆனால் அவருக்கு திருமணத்தில் பெரிய ஆர்வம் இல்லை என்றும் அவர் திருமணம் செய்து கொள்ளாமல் முரட்டு சிங்கிளாகவே இருந்து விடுவார் என்றும் ஒரு தகவல் பரவியது.

- Advertisement -

அதே நேரத்தில் நடிகை அனுஷ்காவும் திருமணம் செய்யாமலே இருந்ததால் ஒருவேளை இருவரும் ஒரு கட்டத்தில் தங்களது திருமண அறிவிப்பை ஒன்றாக கூட அறிவிக்கலாம் என்றும் ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் இப்போது நடிகர் பிரபாஸ் குறித்து அவரது நெருங்கிய உறவினர் ஷியாமளா தேவி என்பவர் ஒரு நேர்காணலில் இது குறித்து பேசி இருக்கிறார்.

இதுகுறித்து ஷியாமளா தேவி கூறியதாவது, தற்போது பிரபாஸூக்கு 45 வயதாகி விட்டதால் அவருக்கு திருமணம் செய்த செய்ய வேண்டும் என்று அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளோம். கூடிய சீக்கிரமே சிவனின் அருளால் பிரபாஸூக்கு திருமணம் நடைபெறும் என்று அவர் உறுதியாக கூறியிருக்கிறார். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.அதே நேரத்தில் மணப்பெண் யார் என்பது குறித்த எந்த தகவலும் இல்லை. ஒருவேளை நடிகை அனுஷ்காவை தான் திருமணம் செய்து கொள்ளப் போகிறாரா என்றும் ரசிகர்கள் ஆர்வமாக கேள்வி எழுப்பி வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்