- Advertisement -
Homeபொழுதுபோக்குலெஜெண்ட் சரவணன் அண்ணாச்சியுடன் துரை செந்தில்குமார் கைகோர்த்து இருக்கும் திரைப்படம் எப்போ ரிலீஸ் ஆகப்போகுது தெரியுமா......

லெஜெண்ட் சரவணன் அண்ணாச்சியுடன் துரை செந்தில்குமார் கைகோர்த்து இருக்கும் திரைப்படம் எப்போ ரிலீஸ் ஆகப்போகுது தெரியுமா… அண்ணாச்சியே சொன்ன தகவலை பார்க்கலாமா…

- Advertisement -

தமிழகத்தில் ஜவுளி துறை உள்ளிட்ட பல்வேறு வியாபாரங்களில் கொடிகட்டி பறப்பவர் லெஜெண்ட் சரவணன். தனது துணிக்கடையின் விளம்பரத்தில்தான் இவர் முதல் முறையாக மக்களுக்கு பரீட்சையமானார். அந்த விளம்பரம் இணையத்தில் வைரலாக, பலரது பார்வையும் சரவணன் மீது திரும்பியது.

இதனைத் தொடர்ந்து அவர் திரைப்படங்களில் நடிப்பதற்கும் தயாரானார். இதில் முதல் திரைப்படமாக லெஜெண்ட் அமைந்தது. ஹாரிஸ் ஜெயராஜ் இதற்கு இசை அமைத்திருந்தார். இயக்குனர்கள் ஜேடி ஜெர்ரி ஆகியோர் இணைந்து இந்த திரைப்படத்தை இயக்கினர். அதிக பொருட்செலவில் இந்த திரைப்படம் எடுக்கப்பட்டிருந்தது.

- Advertisement -

லெஜன்ட் திரைப்படம் மேக்கிங் ரீதியாக நன்றாக வந்தது என்றே கூறலாம். காட்சிக்கு காட்சி பணத்தை அதிகளவு செலவிட்டிருப்பதை காட்டினார்கள். சொல்லப்போனால் ரஜினிகாந்தின் சிவாஜி திரைப்படத்தின் கதையை சற்று உல்டாவாக மாற்றி இந்த திரைப்படம் எடுக்கப்பட்டிருந்தது. ஆனால் விமர்சன ரீதியாக இது ரசிகர்களின் கவனத்தை பெறவில்லை.

அதற்கு மாறாக பலரும் இந்த திரைப்படத்தை கலாய்க்க ஆரம்பித்தனர். குறிப்பாக, சரவணன் நடித்த காட்சிகள் சுமாராக வர, அதனை வீடியோ கிளிப்பாக வெளியிட்டு கலாய்த்தனர். பெரும்பாலான காட்சிகள் மீம்ஸ் கிரியேட்டர்களில் டெம்ப்ளேட் ஆக மாறின. இதனால் லெஜன்ட் திரைப்படம் மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு நல்ல தீனியாக அமைந்தது என்றே கூறலாம். நீண்ட நாட்களுக்குப் பிறகு இது ஓடிடி தளத்திலும் ரிலீஸ் செய்யப்பட்டது.

- Advertisement -

இப்படியான சூழலில் தனது அடுத்த திரைப்படத்திற்கு சிறிய இடைவேளை விட்டிருந்தார் லெஜன்ட் சரவணன். யாருமே எதிர்பார்க்காத வகையில் துரை செந்தில்குமார் இயக்கத்தில் அவர் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. எதிர்நீச்சல், காக்கி சட்டை, கொடி, சமீபத்தில் வெளியான கருடன் என வெற்றி திரைப்படங்களைக் கொடுத்தவர் துரை செந்தில்குமார்.

அவர் லெஜெண்ட் சரவணனை வைத்து இயக்குவது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. தூத்துக்குடியில் ஆரம்பித்து பல்வேறு நகரங்களில் இந்த கதை பயணிப்பது போன்று இருக்கும் என ஏற்கனவே சரவணன் கூறியிருந்தார். க்ரைம் மூவியாக இது எடுக்கப்படுவதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற லெஜன்ட் சரவணன் தற்போது திரைப்படத்தின் ஷூட்டிங் பணிகள் இறுதி கட்டத்தை எட்டி விட்டதாகவும், தீபாவளி பண்டிகைக்கு படத்தை வெளியிட திட்டமிட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.

- Advertisement -

சற்று முன்