- Advertisement -
Homeபொழுதுபோக்குஎனக்கு இப்படி நடிக்கத்தான் ஆசை... மனம் திறந்த தெலுங்கு நடிகை ஸ்ரீ லீலா... ஆச்சரியப்பட்ட ரசிகர்கள்...

எனக்கு இப்படி நடிக்கத்தான் ஆசை… மனம் திறந்த தெலுங்கு நடிகை ஸ்ரீ லீலா… ஆச்சரியப்பட்ட ரசிகர்கள்…

- Advertisement -

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஸ்ரீ லீலா. இளம் நடிகையான இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. தெலுங்கு உலகின் முன்னணி நட்சத்திரம் ஆன பாலையா நடித்த பகவத் கேசரி திரைப்படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ஸ்ரீ லீலா. இந்த திரைப்படத்தின் மூலம் அவர் தெலுங்கு சினிமாவை தாண்டி பேசப்பட்டார்.

இருப்பினும் ஸ்ரீ லீலா இந்திய சினிமா முழுவதும் பேசப்பட்டது, குண்டூர் காரன் திரைப்படத்தில்தான். மகேஷ்பாபு ஹீரோவாக நடித்திருந்த இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக வந்தார் ஸ்ரீ லீலா. அதில் இடம்பெற்ற குத்து பாடலுக்கு அவர் ஆடிய நடனம் மிகப்பெரிய அளவில் ரீச் ஆனது. யார் இவர் என்று பலரும் கேள்வி எழுப்பும் அளவுக்கு, நடனத்தில் அசத்தினார் ஸ்ரீ லீலா.

- Advertisement -

இதனைத் தொடர்ந்து தெலுங்கு சினிமாவை கடந்து அவருக்கு பல மாநிலங்களிலும் திரைப்பட வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தன. விஜய் – வெங்கட் பிரபு இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படத்தில், பாடல் ஒன்றுக்கு நடனமாடும் வாய்ப்பு ஸ்ரீ லீலாவுக்கு கிடைத்தது. ஆனால் அதனை மறுத்துவிட்டார்.

தமிழ் சினிமாவில் ஹீரோயினாக ஒரு கனமான கதாபாத்திரத்தில் நடிக்கவே ஆசை என்றும், வெறும் பாடலுக்கு மட்டும் நடனமாட விருப்பமில்லை என்றும் அவர் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படியான சூழலில் தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில், பராசக்தி திரைப்படத்தில் நடித்து வருகிறார் ஸ்ரீ லீலா.

- Advertisement -

இதன் க்ளிம்ப்ஸ் காட்சி வெளியான போது, ஸ்ரீ லீலாவின் கதாபாத்திரம் குறித்து அப்போதே பேசப்பட்டது. அதில் தெலுங்கு பேசும் பெண் கதாபாத்திரமாக அவர் வருகிறார். 1970 ஆம் ஆண்டு பிரதிபலித்து அந்த திரைப்படம் எடுக்கப்படும் சூழலில் அதற்கு ஏற்றது போல் அவருக்கு மேக்கப் போடப்பட்டிருக்கிறது. ஸ்ரீ லீலாவின் கதாபாத்திரம் நிச்சயம் பேசப்படும் என்று அதர்வா ஒரு பேட்டியில் தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில், திரைப்படத்துறையில் தனது ஆசை குறித்த பல்வேறு விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார் ஸ்ரீ லீலா. அதில் தனக்கு 24 வயது தான் ஆகிறது என்றும், காதல் மற்றும் நகைச்சுவை சம்பந்தப்பட்ட திரைப்படங்களில் நடிக்கவே ஆசை எனவும் அவர் கூறியிருக்கிறார். பெண்களை மையமாக வைத்து வலிமையான ரோல் கொண்ட திரைப்படங்களை பார்க்கும்போது அதில் நடிக்கவும் ஆசை இருக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

சற்று முன்